பணியாளர்களுக்கு 3 மாத ஊதியம் சிறப்பு போனஸ்: ஃபெராரி அறிவிப்பு

ஃபெராரியில் பணிபுரியும் பணியாளர்கள் ரூ.1.04 லட்சத்தை அடிப்படை ஊதியமாக பெறுகின்றனர்.இந்த அறிவிப்பு மூலம் அடுத்த மாத ஊதியத்துடன் சேர்த்து 3 மாத போனஸ் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம், ஃபெராரியில் பணிபுரியும் 3,000 தொழிலாளர்கள் பயன்பெறுவர்.
பொருளாதார மந்தநிலையால் பல முன்னணி கார் நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்து வரும் நிலையில் ஃபெராரி குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதிக மாடல்களை அறிமுகம் செய்ததும் , அந்த மாடல்கள் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுமே இந்த வளர்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஃபெராரி தலைவர் லூகா டி மான்டிஸிமோலா கூறியிருப்பதாவது," நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு உழைத்த அனைத்து பணியாளர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி கூறுகிறேன்.
அடுத்த 2013-2015ம் ஆண்டுகளுக்கிடையிலான காலத்திலும் இதேபோன்று வளர்ச்சியை பெற பணியாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், இதேபோன்று ஒரு போனசை அவர்கள் எதிர்பார்க்கலாம்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








