அடுத்த தலைமுறை கலிஃபோர்னியா காரை களமிறக்கும் ஃபெராரி
அடுத்த தலைமுறை ஃபெராரி கலிஃபோர்னியா கார் ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இந்த கார் புதிய பெயரில் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஃபெராரியின் எஃப் 12 பெர்லினேட்டா மற்றும் 458 இட்டாலியா மாடல்களின் டிசைன் தாத்பரியங்கள் இந்த காரிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஃபெராரியின் என்ட்ரி லெவல் காரான இதில் தோற்றத்திலும், பெர்ஃபார்மென்சிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். தவிர, இந்த காரின் யூஸர் இன்டர்ஃபேஸ் அமைப்பும் மாற்றப்பட உள்ளது. ஆப்பிளின் உதவியுடன் கூடிய புதிய தொழில்நுட்பம் கொண்ட யூஸர் இன்டர்ஃபேஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
மஸராட்டி குவாட்ரோபோர்ட்டே மற்றும் கிப்ளி மாடல்களில் இருக்கும் 523 எச்பி திறன் கொண்ட 3.8 லிட்டர் வி8 எஞ்சினில் டர்போசார்ஜரை சேர்த்து இந்த காரில் பயன்படுத்தியுள்ளது ஃபெராரி. எனவே, கூடுதல் சக்தி கொண்டதாக புதிய கலிஃபோர்னியா வர இருக்கிறது.
ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் ஓரிரு மாதங்களில் டெலிவிரி கொடுக்கப்பட உள்ளது. இந்த புதிய காருக்கான முன்பதிவை பல ஃபெராரி டீலர்கள் துவங்கிவிட்டனர்.


Click it and Unblock the Notifications








