ஃபெராரி கார்களை அழகான பெண்கள் என வர்ணித்த லூகா!

By Saravana
Ferrari Chairman Luca
"ஃபெராரி கார் அழகான பெண்கள் போன்றது; அதன் மீது ஆசை கொண்டால், அடைவதற்கு நீங்கள் நிச்சயம் காத்திருக்க வேண்டும்," என ஃபெராரி நிறுவனத்தின் தலைவர் லூகா டி மான்டிஸிமோலோ வர்ணித்து கூறியுள்ளார்.

நடப்பாண்டின் முதல் காலாண்டில் 1,798 ஃபெராரி கார்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் விற்பனை 4 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பிராண்டு மதிப்பை கூட்டுவதற்காக நடப்பாண்டில் உற்பத்தியை குறைக்க ஃபெராரி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஃபெராரி தலைவர் லூகா டி மான்டிஸிமோலோ கூறியிருப்பதாவது," நடப்பாண்டில் மொத்தம் 7,000 ஃபெராரி கார்களை மட்டுமே உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளோம்.

ஃபெராரி பிராண்டுக்கான மதிப்பை உயர்த்தவும், தனித்துவம் பெறும் விதத்தில் இந்த முடிவை எடுத்துள்ளோம். ஏனெனில், ஃபெராரி கார்கள் அழகான பெண்கள் போன்றது. அதன் மீது ஆசைபடுபவர்கள் சற்று காத்திருந்தான் பெற முடியும், என்று அவர் வர்ணித்து கூறினார்.

மேலும், மறைந்த முன்னாள் ஃபெராரி தலைவர் என்ஸோ ஃபெராரியின் கூற்றுப்படி அதிக அளவில் கார் உற்பத்தி செய்வதில் எங்களுக்கு விருப்பமில்லை என்றும் லூகா கூறியிருக்கிறார். யூஸ்டு கார் மார்க்கெட்டில் ஃபெராரி கார்கள் மலிந்து விடுவதை தவிர்க்க விரும்புகிறோம். எனவேதான் உற்பத்தியை குறைத்து கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளோம்," என்று தெரிவித்தார்.

More from DriveSpark

Article Published On: Friday, May 10, 2013, 15:50 [IST]
English summary
Ferrari chairman, Luca di Montezemolo Says, "Ferrari is like a beautiful woman. You must desire her, you must wait for her."
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+