கூரையில் படுதா போட்ட கார் ரூ.56 லட்சத்துக்கு விற்பனை!
கார்களை கஸ்டமைஸ் செய்வதற்கு அதிக செலவாகும். மேலும், வாடிக்கையாளர்களின் விருப்பத்தையும், விரலின் வீக்கத்தையும் பொறுத்து இந்த தொகை இருக்கும். ஆனால், கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஃபியட் 500 கார் ஒன்று ரூ.56 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது. இதுதான் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட கஸ்டமைஸ் செய்த ஃபியட் காராக கூறப்படுகிறது.
இத்தாலியை சேர்ந்த கஸ்டக்னா மிலானோ என்ற நிறுழனம் இந்த காரை கஸ்டமைஸ் செய்துள்ளது. டென்டர் டூ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கார் 2008ம் ஆண்டு கான்செப்ட் நிலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், மிகுந்த நேர்த்தியுடன் இந்த காரை தற்போது கஸ்டமைஸ் செய்து அமெரிக்க வாடிக்கையாளர் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளது கஸ்டக்னா. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

அமெரிக்கா செல்கிறது
கஸ்டக்னா மிலானோ நிறுவனம் உலகம் முழுவதும் கஸ்டமைஸ் செய்யப்பட்ட கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது. ஆனால், அந்த நிறுவனத்தின் 60 ஆண்டுகால சரித்திரத்தில் தற்போதுதான் முதன்முறையாக தனது முதலாவது கஸ்டமைஸ் காரை அமெரிக்காவுக்கு அனுப்புகிறது.

2,000 மணிநேர உழைப்பில்...
இந்த காரை கஸ்டமைஸ் செய்வதற்கு 2,000 மணிநேரம் ஆகியிருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த பெர்ட் டெவிக் என்பவர்தான் இந்த காரை வாங்கியிருக்கிறார்.

பீச் கார்
இந்த கார் பீச் கார் ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கதவுகளை பிடுங்கிவிட்டு மரவேலைப்பாடுகளை செய்து அழகுப்படுத்தியிருக்கிறது கஸ்டக்னா மிலானோ நிறுவனம்.

இன்டிரியர்
படகுகளில் இருப்பது போன்று இந்த காரின் உட்புறம் உயர் ரக மரவேலைப்பாடுகளுடன் இழைக்கப்பட்டுள்ளன. இந்த காரில் குளிப்பதற்கான ஷவர் வசதி, கூலர் ஆகியவை இருக்கின்றன.

ஏணிப் படி
காரின் பின்புறத்தில் சிறியவர்கள் ஏறி இறங்குவதற்கு வசதியாக எலக்ட்ரிக் கன்ட்ரோல் ஏணிப் படி பொருத்தப்பட்டுள்ளது.

டச் ஸ்கிரீன் திரைகள்
இந்த காரின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் இரண்டு டச் ஸ்கிரீன் திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

விலை
இந்த கார் ரூ.56 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications








