இந்தியாவில் புதிய மல்டிஜெட் டீசல் எஞ்சினை அறிமுகப்படுத்தும் ஃபியட்!

By Saravana
Fiat Multijet 2 Diesel Engine
இந்திய மார்க்கெட்டில் புதிய மல்டிஜெட் 2 டீசல் எஞ்சினை அறிமுகப்படுத்த உள்ளது ஃபியட் கார் நிறுவனம்.

2002ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த எஞ்சின் குறைந்த கார்பன் புகை, குறைந்த சப்தம், சிறந்த மைலேஜ் மற்றும் அதிக பெர்ஃபார்மென்ஸ் கொண்ட எஞ்சினாக புகழப்பெறுகிறது.

இந்தியாவில் ஓடும் ஒரு டஜன் கார்களில் ஃபியட்டின் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின்தான் உயிர் கொடுத்து வருகிறது. ஸ்விப்ட், டிசையர் என பல விற்பனையில் முன்னிலை வகிக்கும் டீசல் கார்களும் இதில் அடக்கம்.

இந்த நிலையில், தனித்து இந்திய மார்க்கெட்டில் ஆவர்த்தனம் துவங்கியிருக்கும் ஃபியட் புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது.

இதேபோன்று, டீசல் கார்கள் மீது இந்திய வாடிக்கையாளர்களின் மோகத்தை மனதில் கொண்டு புதிய மல்டிஜெட் 2 டீசல் என்ற புதிய எஞ்சினை அறிமுகப்படுத்த உள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு புன்ட்டோ எவோ காரில் இந்த புதிய எஞ்சின் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வந்தது. இந்த நிலையில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் கார்களில் இந்த டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வருகிறது.

தற்போது பல கார்களில் பொருத்தப்பட்டிருக்கும் 1.3 லிட்டர் மல்டிஜெட் எஞ்சினைவிட அதிக சிறப்பம்சங்கள் கொண்டதாக இருக்கும். இந்த எஞ்சின் யூரோ 5 மாசுக்கட்டுப்பாட்டு அம்சத்தை கொண்டது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 9, 2013, 14:38 [IST]
English summary
Italian car maker Fiat is planning to launch new diesel engine in Indian market soon.The Fiat Multijet 2 diesel technology made its debut first in the Fiat Punto Evo in 2009 and the USP of the technology is that it boosts the fuel delivery process by a wide margin and the latest technology.
மேலும்... #fiat #four wheeler #ஃபியட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+