நாளை விற்பனைக்கு வருகிறது புன்ட்டோ ஸ்போர்ட்!
ஃபியட் புன்ட்டோ ஸ்போர்ட் கார் பெங்களூரில் நாளை நடைபெறும் விழாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இரண்டு கார் மாடல்களுடன் இதுவரை காலந்தள்ளிய ஃபியட் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் ஏராளமான மாடல்களை தனது கைவசம் வைத்திருப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இதற்கு தகுந்தாற்போல் முதலில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக, நாட்டின் அனைத்து நகரங்களிலும் டீலர்ஷிப்புகளை நியமித்து வருகிறது
இந்த நிலையில், புன்ட்டோ காரின் ஸ்போரட் மாடலை நாளை விற்பனைக்கு கொண்டு வருகிறது ஃபியட். இந்த கார் இளைஞர்களை வெகுவாக கவரும் ஸ்பெஷல் ஸ்டிக்கர்கள் மற்றும் பவர்ஃபுல் எஞ்சின் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும்.


Click it and Unblock the Notifications








