50 லட்சம் 1.3லி மல்டிஜெட் எஞ்சின்களை தயாரித்த ஃபியட்!

By Saravana

போலந்து நாட்டில் இருக்கும் ஃபியட் ஆலையில் 50 லட்சம் 1.3லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின்கள் உற்பத்தி செய்யப்பட்டு புதிய சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் ஃபியட்டின் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் ஏராளமான கார் மாடல்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கூட வெவ்வேறு பிராண்டுகளில் கிட்டத்தட்ட 14 கார் மாடல்களில் இந்த எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது.

Fiat Poland Facility

இந்தியாவில் தேசிய கார் எஞ்சின் என்றும் செல்லமாக இந்த எஞ்சினை அழைக்கின்றனர். ஒவ்வொரு கார் மாடலுக்கும் தகுந்தவாறு டியூனிங் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய கார் மார்க்கெட் விற்பனையில் மி்கவும் பின்தங்கி இருக்கும் ஃபியட்டுக்கு வர்த்தக ரீதியில் சப்போர்ட் செய்து வருவதும் இந்த எஞ்சின். இந்த எஞ்சினுக்கு இருக்கும் மதிப்பு கூட இந்திய மார்க்கெட்டில் ஃபியட் கார்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை.

மாருதி, செவர்லே, பிரிமியர் என பல நிறுவனங்களுக்கு இந்த எஞ்சினை ஃபியட் சப்ளை செய்து வருகிறது. இந்த நிலையில், ஏராளமான பெருமைகளுக்கு சொந்தக்காரனாக திகழும் இந்த எஞ்சின் தற்போது ஆட்டோமொபைல் துறையில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளது.

போலந்து நாட்டில் இருக்கும் ஃபியட் எஞ்சின் தயாரிப்பு ஆலையில் இதுவரை 50 லட்சம் 1.3லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இந்த எஞ்சின் பயன்படுத்தப்படும் டீசல் கார் மாடல்கள் பின்வருமாறு,

ஃபியட் புன்ட்டோ
ஃபியட் லீனியா
மாருதி ரிட்ஸ்
மாருதி ஸ்விப்ட்
மாருதி டிசையர்
மாருதி எஸ்எக்ஸ்4
மாருதி எர்டிகா
செவர்லே பீட் டிசிடிஐ
செவர்லே செயில் யுவா
செவர்லே செயில் செடான்
டாடா இண்டிகா விஸ்டா
டாடா இண்டிகா விஸ்டா டி90
டாடா இண்டிகோ மான்ஸா
பிரிமியர் ரியோ எஸ்யூவி

More from DriveSpark

Article Published On: Saturday, March 30, 2013, 16:26 [IST]
English summary
Italian car maker Fiat’s remarkable 1.3-litre Multijet diesel engine has reached a historic milestone of 50,00,000 units produced at the Fiat Powertrain Technologies, Poland factory in Bielsko-Biala.
மேலும்... #fiat #four wheeler #ஃபியட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+