சென்னையில் புதிய கார் ஷோரூம் திறந்த ஃபியட்

டாடா கார் ஷோரூம்களில் ஒண்டிக்குடித்தனம் நடத்தி வந்த ஃபியட் தற்போது இந்திய மார்க்கெட்டில் தனித்து களமிறங்கி இருக்கிறது.
நாடு முழுவதும் புதிய கார் ஷோரூம்களை திறந்து வருகிறது. அந்த வகையில், தற்போது சென்னையிலும் புதிய கார் ஷோரூமை ஃபியட் திறந்திருக்கிறது.
ஆர்டிசி மோட்டார்ஸ் நிறுவனம் சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட புதிய டீலராக நியமிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய டீலர்ஷிப்பில் ஃபியட் கார்களின் விற்பனை மற்றும் சர்வீஸ் பணிகள் மேற்கொள்ளப்படும்.
நம்பர்.41, முதல் மெயின்ரோடு, சிஐடி நகர், நந்தனம் என்ற முகவரில் இந்த புதிய ஷோரூம் செயல்படுகிறது. இந்த புதிய கார் ஷோரூம் 5,760 சதுரஅடி பரப்பளவில் கார்களை பார்வைக்கு நிறுத்தும் வசதியுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. 15,000 சதுர அடி பரப்பளவில் கார் சர்வீஸ் மையம் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
சென்னை வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய ஷோரூம் மூலம் நிறைவான சேவை அளிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக ஷோரூமை திறந்து வைத்த ஃபியட் உயரதிகாரி தெரிவித்தார்.
இந்த புதிய ஷோரூமுடன் சேர்த்து நாடு முழுவதும் ஃபியட் ஷோரூம்களின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் இந்த எண்ணிக்கையை 65 ஆக உயர்த்த ஃபியட் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








