சென்னையில் ஃபியட்டின் இரண்டாவது புதிய கார் ஷோரூம் திறப்பு

இந்த புதிய கார் ஷோரூமை ஃபியட் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான நாகேஷ் பசவனஹள்ளி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,
" இந்தியாவில் வர்த்தக விரிவாக்க நடவடிக்கைகளை வெகு தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். நடப்பு ஆண்டு இறுதிக்குள் 100 ஷோரூம்களை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.
நீண்ட கால அடிப்படையில் தயாரிப்பு, பிராண்டு மற்றும் சேவை மையங்கள் மீது கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளோம். சிறந்த தயாரிப்புகளை வைத்திருக்கிறோம்.
ஜீப் பிராண்டு மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் ஜீப் பிராண்டு எஸ்யூவிகளை அறிமுகப்படுத்த உள்ளோம். அபார்த் பிராண்டையும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்," என்றார்.
வேளச்சேரியில் ஷோரூமும், பெருங்குடியில் சர்வீஸ் மையமும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image Source: Team Fiat India


Click it and Unblock the Notifications








