அடுத்த ஆண்டு புதிய காம்பெக்ட் எஸ்யூவியை களமிறக்கும் ஃபியட்
அமெரிக்காவை சேர்ந்த ஜீப் பிராண்டில் பல புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது ஃபியட். முதலாவதாக ஜீப் கெரோக்கீ மாடல் வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட புத்தம் புதிய காம்பெக்ட் எஸ்யூவியை அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்தியாவில்தான் இந்த புதிய ஜீப் மாடல் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து, பிரேசில் உள்ளிட்ட பல்வேறு மார்க்கெட்டுகளில் இந்த புதிய ஜீப் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் 2014 காம்பெக்ட் எஸ்யூவி பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஆஃப் ரோடு டிசைன்
எத்தகைய சாலை நிலைகளிலும் பயன்படுத்தும் விதத்தில் கட்டுறுதி மிக்கதாக இருக்கும். ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஸ்டான்டர்டு அம்சமாக இந்த காம்பெக்ட் எஸ்யூவி கொண்டிருக்கும்.

எஞ்சின்
புதிய ஜீப் பிராண்டின் காம்பெக்ட் எஸ்யூவி மாடலில் 1.4 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்தியாவில் அசெம்பிளிங்
புனேயில் உள்ள ஆலையில் புதிய ஜீப் எஸ்யூவியை அசெம்பிளிங் செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டு மத்தியில் இந்த புதிய ஜீப் மாடல் இந்தியாவி்ல அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்றுமதி
இந்த புதிய ஜீப் மாடலை இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யவும் ஃபியட் திட்டமிட்டுள்ளது.

போட்டியாளர்
மஹிந்திரா தார் ஜீப்புக்கு இணையான அம்சங்களை கொண்டிருக்கும். மேலும், ரெனோ டஸ்ட்டர் விரைவில் அறிமுகமாக இருக்கும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மார்க்கெட்டிலும் சிறிது உடைக்க முடியும் என ஃபியட் நம்புகிறது.

விலை
ரூ.7 லட்சம் முதல் ரூ.8 லட்சம் ஆரம்ப விலையில் இந்த புதிய ஜீப் அறிமுகமாகும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications








