டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஷோ காட்டப் போகும் புன்ட்டோ அபார்த்!

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் ஃபியட் புன்ட்டோ அபார்த் கார் பார்வைக்கு வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவை உள்ளிட்ட இடங்களில் வைத்து 2 டோர் புன்ட்டோ அபார்த் கார் ஏற்கனவே சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 4 கதவுகள் கொண்ட புன்ட்டோ அபார்த் காரை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஃபியட் காட்சி படுத்த உள்ளதாம். ஜீப் பிராண்டு கார்களுடன் இந்த காரையும் காட்சிக்கு வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதிக பவர்ஃபுல் ஹேட்ச்பேக் காரான புன்ட்டோ அபார்த் தற்போதே மிகப்பெரிய ஆவலை எழுப்பியுள்ளது. அந்த கார் பற்றிய சில கூடுதல் தகவல்கள்.

மிரட்டலான தோற்றம்

மிரட்டலான தோற்றம்

புன்ட்டோ அபார்த் தோற்றம் குட்டி ஸ்போர்ட்ஸ் காராக இருக்கிறது. இதன் 17 இஞ்ச் அலாய் வீல்கள் ஒரு ராட்சத உணர்வை ஏற்படுத்துகின்றன.

பவர்ஃபுல் எஞ்சின்

பவர்ஃபுல் எஞ்சின்

பவர்ஃபுல் ஹேட்ச்பேக் கார்கள் அதிகபட்சம் 89 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் நிலையில், இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1.4 லிட்டர் டி-ஜெட் எஞ்சின் 140 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

 பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

மணிக்கு 216 கிமீ வரை தொடக்கூடிய வல்லமை கொண்ட இந்த ஹேட்ச்பேக் கார் 0- 100 கிமீ வேகத்தை 7.6 வினாடிகளில் தாண்டிவிடும்.

சிறப்பு சஸ்பென்ஷன்

சிறப்பு சஸ்பென்ஷன்

அதிக பவர் கொண்ட கார் என்பதால் இதில் உறுதிமிக்க சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டிருக்கும்.

 இறக்குமதி மாடல்

இறக்குமதி மாடல்

இந்தியாவில் இறக்குமதி செய்து முதலில் புன்ட்டோ அபார்த் விற்பனை செய்யப்பட உள்ளது.

விலை

விலை

ரூ.9 லட்சம் ஆரம்ப விலையில் இந்த ஹாட் ஹேட்ச்பேக் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 29, 2013, 17:13 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+