ரூ.8.99 லட்சத்தில் புதிய ஃபோர்ஸ் ஒன் பேஸ் வேரியண்ட் அறிமுகம்!

Force One Suv
வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ரூ.8.99 லட்சம் என்ற குறைந்த விலையில் ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவியின் புதிய பேஸ் வேரியண்ட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவி பலவித தனிச்சிறப்புகளை கொண்டது. டெய்ம்லரிடமிருந்து பெறப்படும் எஞ்சின், லோட்டஸ் எஞ்சினியரிங் டியூனிங் செய்த சஸ்பென்ஷன் செட்டிங்குடன் வருகிறது.

இந்த நிலையில், செடான் கார் வாடிக்கையாளர்களையும் கவரும் விலையில் புதிய பேஸ் வேரியண்ட்டை ஃபோர்ஸ் விற்பனைக்கு விட்டுள்ளது. ஆனால், புதிய பேஸ் வேரியண்ட்டில் குறைந்த சக்தியை வழங்கும் டீசல் எஞ்சினுடன் வருகிறது.

முன்பு விற்பனை செய்யப்படும் மாடல்களில் 141பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் டெய்ம்லர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால், புதிய பேஸ் வேரியண்ட்டில் 2596சிசி டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 82 பிஎஸ் பவரையும், 230 என்எம் டார்க்கையும் அளிக்கும் திறன் கொண்ட இந்த எஞ்சினுடன் ஜி32 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இணைந்து துணைபுரிகிறது.

இருப்பினும், புதிய பேஸ் வேரியண்ட்டில் பவர் ஸ்டீயரிங், பனி விளக்குகள், ஏசி, சென்ட்ரல் லாக்கிங், ஸ்டீல் வீல்கள் ஆகிய அம்சங்களை கொண்டிருக்கிறது.

பிற வேரியண்ட்டுகள் ரூ.11.70 லட்சம் முதல் ரூ.12.06 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும் நிலையில், புதிய பேஸ் வேரியண்ட் ரூ.8.99 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 30, 2013, 14:21 [IST]
English summary
Force Motors has introduced Force One suv's new base variant “EX” at a price of INR 8.99 Lakh.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+