2 மில்லியன் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் உற்பத்தி: ஃபோர்டு சாதனை

வாடிக்கையாளர்களை கவர்ந்த ஃபோர்டு ஈக்கோபூஸ்ட் எஞ்சின் உற்பத்தி புதிய மைல்கல்லை கடந்துள்ளது. உலக அளவில் 2 மில்லியன் ஈக்கோபூஸ்ட் எஞ்சின்களை ஃபோர்டு உற்பத்தி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

டர்போசார்ஜர் துணையுடன் பெரிய எஞ்சின்களுக்கு இணையான பவருடன் அதிக மைலேஜ், குறைந்த கார்பன் புகை வெளியிடும் தன்மை கொண்ட சிறப்பம்சங்களுடன் ஃபோர்டு வடிவமைத்த புதிய வகை பெட்ரோல் எஞ்சின்கள் ஈக்கோபூஸ்ட் என பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

இந்த எஞ்சின்கள் பொருத்தப்பட்ட ஃபோர்டு கார் மாடல்களுக்கு உலக அளவில் தனி வரவேற்பு இருக்கிறது. ஈக்கோபூஸ்ட் எஞ்சின் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

முதல் ஈக்கோபூஸ்ட்

முதல் ஈக்கோபூஸ்ட்

2009ம் ஆண்டு முதல்முதலாக லிங்கன் சி கான்செப்ட்டில் 1.6 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட்டது. இது 180 பிஎச்பி ஆற்றலையும், 244 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் வகையில் இருந்தது.

ஈக்கோபூஸ்ட் மாடல்கள்

ஈக்கோபூஸ்ட் மாடல்கள்

1.0 லிட்டர், 1.5 லிட்டர், 1.6 லிட்டர், 2.0 லிட்டர் மற்றும் ட்வின் டர்போ கொண்ட 3.5 லிட்டர் மாடல்களில் ஈக்கோபூஸ்ட் எஞ்சின்களை ஃபோர்டு தயாரித்து வருகிறது.

ஃபியஸ்ட்டாவில் ஈக்கோபூஸ்ட்

ஃபியஸ்ட்டாவில் ஈக்கோபூஸ்ட்

2014 மாடல் ஃபியஸ்ட்டா ஹேட்ச்பேக் மற்றும் செடான் கார்களில் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சினை பொருத்தி விற்பனை கொண்டு வருகிறது ஃபோர்டு.

 இந்தியாவில் ஈக்கோபூஸ்ட்

இந்தியாவில் ஈக்கோபூஸ்ட்

இந்தியாவில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் மட்டும் தற்போது 3 சிலிண்டர் கொண்ட 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடலின் டைட்டானியம், டைட்டானியம் ப்ளஸ் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஈக்கோபூஸ்ட் எஞ்சின் கொண்ட ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி லிட்டருக்கு 18.9 கிமீ மைலேஜையும், 1.6 லிட்டர் எஞ்சினுக்கு 120 பிஎச்பி பவரையும் அளிக்கும். மேலும், இந்தியாவிலும் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் பொருத்தப்பட்ட ஈக்கோஸ்போர்ட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், ஈக்கோபூஸ்ட் எஞ்சின் மாடலுக்கான முன்பதிவையும் ஃபோர்டு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

ஈக்கோபூஸ்டுக்கும் போட்டி

ஈக்கோபூஸ்டுக்கும் போட்டி

ஈக்கோபூஸ்ட் எஞ்சினுக்கு போட்டியாக புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை ஃபோக்ஸ்வேகன் வடிவமைத்து வருகிறது. சோதனை நிலையில் இந்த எஞ்சின் கடந்த ஆண்டு சாவ் பாவ்லோ மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த டைகுன் எஸ்யூவியில் பொருத்தப்பட்டு இருந்தது. இந்த எஞ்சின் 3 சிலிண்டர் கொண்டதாகவும், 110 பிஎஸ் பவரையும், 175 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 18, 2013, 16:18 [IST]
English summary
Ford EcoSport was one of those few models in India which sold well because of the name of the engine associated with it. The 1.0 liter EcoBoost 3 cylinder petrol engine. A lot has been said about Ford's EcoBoost engines since there launch four years back, almost all of them positive. The 1.0 liter unit was even awarded the 2013 International Engine Of The Year title.
மேலும்... #ford #four wheeler
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+