ஈக்கோஸ்போர்ட்டுக்கு அதிபுதிரி முன்பதிவு: நீளும் காத்திருப்பு காலம்
கடந்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஈக்கோஸ்போர்ட்டுக்கு 30,000 க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். இது ஃபோர்டு நிறுவனத்தின் வர்த்தகத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுவரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட கார்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நேரத்தில் அதிக வரவேற்பை பெற்ற மாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது.

17 நாட்களில்...
ஈக்கோஸ்போர்ட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு 17 நாட்களில் 25,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியானது. இந்த நிலையில், தற்போது ஈக்கோஸ்போர்ட்டுக்கு 17 நாட்களில் 30,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

காத்திருப்பு காலம்
முன்பதிவு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததால், ஈக்கோஸ்போர்ட்டுக்கான காத்திருப்பு காலம் 6 மாதம் வரை நீள்கிறது.

டஸ்ட்டரைவிட வரவேற்பு
ரெனோ டஸ்ட்டர் விற்பனைக்கு வந்து 2 மாதங்களில் 18,000 முன்பதிவை பெற்றது. ஆனால், அதையெல்லாம் விஞ்சிவிட்டது ஈக்கோஸ்போர்ட்.


Click it and Unblock the Notifications








