வெறும் 17 நாட்களில் 25,000 ஈக்கோஸ்போர்ட் கார்களுக்கு முன்பதிவு!
விற்பனைக்கு வந்து வெறும் 17 நாட்களில் 25,000 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மினி எஸ்யூவி கார்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் 26ந் தேதிதான் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், ஜூன் முதல் தேதி முதல் முன்பதிவு துவங்கப்பட்டது.

இந்த நிலையில், மிகவும் சவாலான விலையில் இந்த புதிய மினி எஸ்யூவியை மார்க்கெட்டில் ஃபோர்டு நிலைநிறுத்தியது.
இதனால், வாடிக்கையாளர் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 25,000 ஈக்கோஸ்போர்ட் கார்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஃபோர்டு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இதுகுறித்து ஃபோர்டு முறைப்படி தகவல் எதையும் வெளியிடவில்லை. ஆனால், ஈக்கோஸ்போர்ட்டுக்கு வாடிக்கையாளர் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக டீலர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








