ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டில் அவசர கால உதவி தொழில்நுட்பம்

By Saravana

விபத்தில் சிக்கினால் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவையை பெறுவதற்கான சிறப்பு வசதியுடன் ஈக்கோஸ்போர்ட் வர இருக்கிறது. பல வெளிநாடுகளில் இந்த வசதி ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டாலும், இந்தியாவுக்கு இது புதிது.

ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த வசதியை ஈக்கோஸ்போர்ட்டில் ஃபோர்டு அறிமுகப்படுத்துகிறது. இதன்மூலம், அவசர காலத்தில் பிறர் உதவியை எதிர்பார்க்கும் தேவை இருக்காது. மேலும், இது முழுவதும் இலவச சேவையாக இருக்கும் என்பதே ஹைலைட்.

புளூடூத் வேணும்

புளூடூத் வேணும்

ஓட்டுனரோ அல்லது உரிமையாளரோ புளூடூத் இணைப்பு வசதி கொண்ட மொபைல்போன் வைத்திருந்தால் போதுமானது. ஈக்கோஸ்போர்ட்டில் இன்போடெயின்மென்ட் சாதனத்துடன் மொபைல்போனை இணைத்துவிட வேண்டும்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

காரில் ஏறியவுடனேயே மொபைல்போனை இன்போடெயின்மென்ட் சாதனத்துடன் இணைப்பதற்கு எச்சரிக்கை செய்யும் வசதி இருக்கும். எனவே, ஒவ்வொரு முறையும் பயணத்தை துவங்குவதற்கு முன் மொபைல்போனை சாதனத்துடன் இணைத்துக் கொள்ள இந்த கருவி எச்சரிக்கை செய்யும்.

விபத்து

விபத்து

ஒருவேளை, விபத்தில் சிக்கினால் அடுத்த சில வினாடிகளில் மொபைல்போனிலிருந்து 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பு தானாக பறக்கும். மொபைல்போனிலும் ஹேண்ட்ஸ்ப்ரீ மோடுக்கு மாறிவிடும் என்பதால் பேசுவது எளிதாக இருக்கும். இந்த அழைப்பு தேவையில்லையெனில், 10 வினாடிகளுக்குள் துண்டித்துவிடவேண்டும்.

ஜிபிஎஸ் வசதி

ஜிபிஎஸ் வசதி

விபத்து நடந்த இடம் குறித்தும் ஜிபிஎஸ் மூலம் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம் என்பதால் விரைவாக உதவிகள் கிடைக்கும்.

இதர வசதி

இதர வசதி

குறுஞ்செய்தி அனுப்புவது தவிர, ஏர்பேக்கை விரிவடையச் செய்வது மற்றும் எரிபொருள் சப்ளையை நிறுத்துவது போன்றவற்றையும் இந்த சாதனம் பார்த்துக் கொள்ளும். மேலும்,

இலவச சேவை

இலவச சேவை

இந்த சேவையை இலவசமாக ஃபோர்டு வழங்க உள்ளது. கட்டணங்கள் ஏதும் இருக்காது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 9, 2013, 8:59 [IST]
English summary
When Ford launches the EcoSport in India, the EcoBoost engine will not be the only highlight of the car. Ford will also introduce its Sync infotainment system based Emergency Assist feature for the first time in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+