ஐரோப்பாவில் லிமிடேட் எடிசன் ஈக்கோஸ்போர்ட் அறிமுகம்
ஐரோப்பிய மார்க்கெட்டில் லிமிடேட் எடிசன் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் வழியாக இந்த லிமிடேட் எடிசன் மாடலை ஃபோர்டு அறிவித்துள்ளது
ஐரோப்பாவின் பெரும்பான்மையான நாடுகளில் இடது பக்க டிரைவிங் கொண்டதாக இருந்தாலும், இங்கிலாந்திலும் இந்த லிமிடேட் எடிசன் மாடல் விற்பனை செய்யப்பட உள்ளது. கூடுதல் தகவல்களுக்கு ஸ்லைடரில் காணலாம்.

புதிய வசதி
ஃபோர்டு சிங்க் ஆப்லிங்க் சிஸ்டம் இந்த காரில் கொடுக்கப்பட்டிருக்கும். இதன் வழியாக டிரைவர் இருக்கையில் அமர்ந்திருப்பவருக்கு ஸ்மார்ட்போனை இணைத்து வாய்மொழி உத்தரவு வசதியை பெற முடியும்.

பிரத்யேக வண்ணம்
பாந்தர் பிளாக் மெட்டாலிக் பெயிண்ட் ஆகியவை லிமிடேட் எடிசனுக்குரிய சிறப்பம்சங்கள்.

இதர அம்சங்கள்
ரியர் பார்க்கிங் சென்சார், 16 இஞ்ச் அலாய் வீல்கள், அலாய் ஸ்பேர் வீல், பனி விளக்குகள், சில்வர் ரூஃப் ரெயில்கள், பவர் விண்டோஸ், கீ லெஸ் என்ட்ரி, பவர் ஸ்டார்ட், ரிமோட் லாக்கிங், பகல்நேர ரன்னிங் விளக்குகள், ஏழு காற்றுப் பைகள், ஏபிஎஸ் உள்ளிட்ட ஏராளமான நவீன கால அம்சங்கள் நிரந்தரமாக இடம் பெற்றிருக்கும்.

லிமிடேட் எடிசன்
மொத்தம் 500 லிமிடேட் எடிசன் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி கார்கள் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளன. அதில், இங்கிலாந்துக்காக வலது பக்க டிரைவிங் கொண்ட 120 ஈக்கோஸ்போர்ட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

எஞ்சின்
125 பிஎஸ் பவரை அளிக்கும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் மற்றும் 91 பிஎஸ் பவரை அளிக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் இந்த லிமிடேட் எடிசன் டாப் வேரியண்ட்டாக கிடைக்கும்.

டெலிவிரி
ஃபேஸ்புக் பக்கத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் லிங்க்கை ஃபோர்டு வழங்கியுள்ளது. முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மார்ச் முதல் டெலிவிரி வழங்கும் பணிகள் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








