ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டுக்கு 60,000 பேர் முன்பதிவு!
போர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு இதுவரை 60,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூனில் விற்பனைக்கு வந்த ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மிகப் பெரிய வரவேற்பை பெற்றது அறிந்ததே. முன்பதிவு அதிகமானதையடுத்து, உற்பத்தி நெருக்கடி காரணமாக 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், முன்பதிவு 60,000 தாண்டிய நிலையில், அனைத்து வேரியண்ட்டுகளுக்கான முன்பதிவையும் தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளதாக ஃபோர்டு தெரிவித்துள்ளது.
இதுவரை 25,000 ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகள் டெலிவிரி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








