ஈக்கோஸ்போர்ட்... வாடிக்கையாளர்களை சமாதானப்படுத்த திண்டாடும் ஃபோர்டு
கடந்த ஜூன் மாதம் விற்பனைக்கு வந்த ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு தொடர்ந்து நல்ல டிமான்ட் இருந்து வருகிறது. ஆனால், காத்திருப்பு காலம் வெகுவாக அதிகரிதத்தால் கடந்த நவம்பர் முதல் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முன்பதிவு செய்து பல மாதங்களாக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் முணுமுணுப்பு ஃபோர்டு காதுக்கு எட்டியிருக்கிறது. மேலும், குறைவாக காத்திருப்பு காலத்தில் கிடைக்கும் ரெனோ டஸ்ட்டர் மற்றும் நிசான் டெரானோ எஸ்யூவி மாடல்கள் பக்கம் அந்த வாடிக்கையாளர்கள் கவனத்தை திசை திருப்பியுள்ளனர்.

இந்த நிலையில், ஈக்கோஸ்போர்ட் முன்பதிவு செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களை சமாதானப்படுத்தும் விதமாக சில முயற்சிகளை ஃபோர்டு எடுத்து வருகிறது.
சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மார்ச் மாதம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈக்கோஸ்போர்ட்டுக்கு செய்துள்ள முன்பதிவை பிற மாடல்களான ஃபியஸ்ட்டா, ஃபிகோ, கிளாசிக் உள்ளிட்ட கார்களுக்கு மாற்றிக் கொள்ளும் வசதியை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற மாடல்களை தேர்வு செய்யும் பட்சத்தில் ரூ.10,000 மதிப்புடைய கூடுதல் சலுகைகளை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில், ரத்து செய்வதற்கான தொகையை மட்டும் கழித்துக் கொண்டு முன்பதிவு செய்வதற்காக செலுத்தப்பட்ட தொகையை முழுவதுமாக திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








