9 மாதங்கள் வரை நீளும் ஈக்கோஸ்போர்ட் வெயிட்டிங் பீரியட்
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டுக்கு எகிடுதகிடான வரவேற்பு கிடைத்துள்ளது. விற்பனைக்கு வந்து ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், இதுவரை 30,000க்கும் அதிகமான முன்பதிவுகளை பெற்றுள்ளது.
இதன் எதிரொலியால், அந்த காரின் டாப் வேரியண்ட்டுக்கான காத்திருப்பு காலம் 9 மாதங்கள் வரை நீண்டுள்ளது. விற்பனைக்கு கொண்டு வரப்பட்டவுடன் டீசல் மாடல்களுக்கு ரீகால் அறிவிப்பு வெளியிடப்பட்டதால், முன்பதிவில் சுணக்கம் ஏற்படும் என கருதப்பட்டது.

ஆனால், இதையெல்லாம் தாண்டி ஈக்கோஸ்போர்ட்டுக்கான விசாரணைகள் தொடர்ந்து அதிகமாகவே இருப்பதாக டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்போதைய நிலவரப்படி, ஈக்கோஸ்போர்ட்டின் டாப் வேரியண்ட்டுகளுக்கான காத்திருப்பு காலம் மிக அதிகமாக இருக்கிறது. டீசல் டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட்டை முன்பதிவு செய்தால் டெலிவிரி பெறுவதற்கு 9 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது.
டீசல் மாடலின் ஆம்பியன்ட் வேரியண்ட்டுக்கு ஒன்றைரை மாதங்களும், டிரென்ட் வேரியண்ட்டுக்கு 2 மாதங்களும், டைட்டானியம் வேரியண்ட்டுக்கு 8 மாதங்களும், டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட்டுக்கு 9 மாதங்களும் வெயிட்டிங் பீரியட் உள்ளது.
பெட்ரோல் மாடல்களுக்கும் 8 மாதங்கள் வரை வேரியண்ட்டுக்கு தக்கவாறு வெயிட்டிங் பீரியட் நிலவுகிறது.


Click it and Unblock the Notifications








