விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய ஃபோர்டு ஃபிகோ

அதாவது, 5 நிமிடங்களுக்கு ஒரு புதிய வாடிக்கையாளரை ஃபிகோ பெற்று வருகிறது.
கடந்த 2010ம் ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஃபோர்டு ஃபிகோ உள்நாட்டு சந்தை மட்டமின்றி, 37 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஃபோர்டு நிறுவனத்துக்கு புதிய முகவரியை பெற்றுத் தந்த இந்த கார் தற்போது விற்பனையில் 3 லட்சத்தை கடந்திருப்பது குறித்து ஃபோர்டு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஈக்கோஸ்போர்ட்டுக்கு கிடைத்துள்ள வரவேற்பு ஃபோர்டுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. எனவே, தனது டீலர் எண்ணிக்கையை வெகுவாக அதிகரிக்க உள்ளது.
சோலன், கயா, ஆனந்த், சிகார், ஸ்ரீகங்கா நகர் உள்ளிட்ட 5 மூன்றாம் நிலை நகரங்களில் புதிய டீலர்ஷிப்புகளை விரைவில் திறக்க உள்ளது.
இதுதவிர, நாடு முழுவதும் தொடர்ந்து புதிய ஷோரூம்களை திறக்கவும் திட்டமிட்டுள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளில் சிறப்பான சர்வீஸ் நெட்வொர்க் கொண்ட பிராண்டாக தன்னை மாற்றிக் கொள்ளவும் முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








