ஃபோர்டை அலேக்காக தூக்கிய நிறுத்திய ஈக்கோஸ்போர்ட்!
இந்தியாவில் 17 ஆண்டு கால வர்த்தக வரலாற்றில் முதன்முறையாக கடந்த மாதம் அதிகபட்ச விற்பனையை ஃபோர்டு பதிவு செய்துள்ளது.
கடந்த மாதம் உள்நாடு, ஏற்றுமதியை சேர்த்து மொத்தம் 12,338 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜுலையைவிட இது 26 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் உள்நாட்டு மார்க்கெட்டில் 7,867 கார்களையும், 4,471 கார்களை ஏற்றுமதியும் செய்து இந்த உச்சபட்ச விற்பனையை பதிவு செய்துள்ளது.
கடந்த ஜூன் இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியால் இந்த விற்பனை உயர்வை ஃபோர்டு பதிவு செய்திருக்கிறது.
மேலும், ஈக்கோஸ்போர்ட் காருக்கு 30,000க்கும் அதிகமான முன்பதிவு எண்ணிக்கையை பதிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








