ஈக்கோஸ்போர்ட் விலை என்னவாக இருக்கும்?- சொல்லுங்கள் பார்ப்போம்
இந்த ஆண்டின் மிக முக்கியமான மாடலாக கருதப்படும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி இன்னும் சற்று நேரத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. டெல்லியில் நடைபெறும் விழாவில் இந்த புதிய எஸ்யூவியின் விலை உள்ளிட்ட முழு விபரங்கள் வெளியாக இருக்கின்றன.
பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் விற்பனைக்கு வரும் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் மேனுவல், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டதாகவும் கிடைக்கும். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த எஸ்யூவிக்காக பல வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்களாக காத்துக் கிடந்தனர்.

அவர்களது காத்திருப்பு இன்று நிறைவு பெற இருக்கிறது. இந்த நிலையில், டஸ்ட்டருக்கு பெரும் போட்டியாக கருதப்படும் ஈக்கோஸ்போர்ட்டின் விலை குறித்து அனைவர் மத்தியிலும் ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது. ரூ.6 லட்சம் ஆரம்ப விலையில் வரலாம் என எம் கணிப்பு இருக்கிறது.
இந்த நிலையில், ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் என்னவாக இருக்கும் என்று உங்களால் கணிக்க முடிந்தால் கருத்துப் பெட்டியில் நிரப்புங்கள்.


Click it and Unblock the Notifications








