ஸ்பெஷல் எடிசன் ஃபோர்டு என்டெவர்- என்னென்ன புதுசு?

புதிய அம்சங்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் கூடிய சிறப்பு பதிப்பு என்டெவர் எஸ்யூவியை ஃபோர்டு அறிமுகம் செய்துள்ளது. ஹூரிக்கேன் என்ற சிறப்பு பதிப்புக்கு பின்னர் என்டெவர் எஸ்யூவியில் வரும் சிறப்பு பதிப்பு இதுவாகும். ஆஃப்ரோடுக்கு ஏற்ற அம்சங்கள் மற்றும் தாராள இடவசதி மூலம் முழுமையான எஸ்யூவி என்று வாடிக்கையாளர்களிடம் தனி மதிப்பை கொண்டிருக்கிறது என்டெவர்.

இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதத்திலும், வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்திற்கு கூடுதல் மதிப்பு தருவதற்கும் புதிய அம்சங்களை என்டெவரில் சேர்த்துள்ளது ஃபோர்டு. எஞ்சினில் எந்த வித மாற்றங்களும் செய்யப்பட வில்லை. அதேவேளை, டிரைவிங் சிஸ்டத்தை எளிதாக மாற்றிக் கொள்ளும் வகையில் ப்ளை வீல் திருகு என்டெவருக்கு புதிது. இதுதவிர, புதிய என்டெவரில் இருக்கும் சிறப்பு அம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

தோற்றம்

தோற்றம்

புதிய முன்பக்க கிரில், முகப்பில் அதிக இடங்கள் குரோம் பூச்சுடன் பார்த்தவுடன் குதூகலமூட்டுகிறது. பக்கவாட்டில் கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்களும் கவர்ச்சியாக இருக்கிறது.

பெயர் பட்டை

பெயர் பட்டை

என்டெவர் என்று ஆங்கில எழுத்துக்களுடன் கூடிய பட்டை கிரில்லுக்கு மேலே, பானட்டின் முகப்பில் பளிச்சென்று தெரிகிறது.

 இன்டிரியர்

இன்டிரியர்

ஆங்காங்கே என்டெவர் பெயர் அலங்கரிக்கிறது. இரட்டை வண்ணக் கலவை கொண்ட பீஜ் இன்டிரியர், ரிவர்ஸ் கேமரா, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், டச் ஸ்கிரீன் நேவிகேஷன் சிஸ்டம் ஆகியவை ஸ்டான்டர்டு ஆக்சஸெரீஸ்களாக இருக்கும்.

ஸ்கஃப் பிளேட்

ஸ்கஃப் பிளேட்

கதவுக்கு கீழே என்டெவர் பெயர் பொறித்த பட்டை பொருத்தப்பட்டிருப்பதை காணலாம்.

சிறப்பு வசதிகள்

சிறப்பு வசதிகள்

புதிய டிசைன் கொண்ட ஸ்போக்குகளுடன் 16 இஞ்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டிருக்கிறது.கூடுதல் காற்றுப் பைகள் மற்றும் டிரைவிங் சிஸ்டத்தை மாற்றிக் கொள்ள ப்ளை ஆன் வீல் திருகு ஆகியவையும் சிறப்பு பதிப்பு என்டெவரின் அம்சங்கள்.

எஞ்சின்

எஞ்சின்

புதிய ஆல் டெர்ரெய்ன் என்டெவரில் 156 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை கொண்டுள்ளது.

 விலை

விலை

புதிய என்டெவர் ஆல் டெர்ரெய்ன் சிறப்பு பதிப்பு ரூ.19.11 லட்சம் விலையில் விற்பனைக்கு விடப்பட்டிருக்கிறது. மஹிந்திரா அறிமுகம் செய்த சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியால் ஏற்பட்டிருக்கும் போட்டியை சமாளிக்கும் வகையில் இந்த ஸ்பெஷல் எடிசன் என்டெவரை ஃபோர்டு களமிறக்கி இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, February 17, 2013, 17:54 [IST]
English summary
American car maker Ford has launched special edition Endeavour called All terrain edition at INR 19.11 lakhs.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+