சலுகைகளுடன் ஃபோர்டு ஷோரூம்களில் நாளை நள்ளிரவு வரை கார் விற்பனை!

ரூ.3.5 கோடி மதிப்புடைய சலுகைகளுடன் நடுராத்திரி கார் விற்பனையை நாளை நடத்துகிறது ஃபோர்டு. ஏராளமான சலுகைகளுடன் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திட்டம் வழக்கம்போல் பெரிய வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது.

கடந்த இரு ஆண்டுகளாக டிசம்பர் முதல் வாரத்தில் நடுராத்திரி வரை கார் விற்பனை செய்யும் திட்டத்தை ஃபோர்டு அறிவித்து வருகிறது. இதேபோன்று, நாளையும் நள்ளிரவு வரை கார் விற்பனை செய்ய உள்ளது ஃபோர்டு. எந்தெந்த காருக்கு எவ்வளவு சலுகைகள் மற்றும் இதர விபரங்களையும், நிபந்தனையையும் ஸ்லைடரில் காணலாம்.

நள்ளிரவு வரை...

நள்ளிரவு வரை...

நாடுமுழுவதும் உள்ள ஃபோர்டு கார் ஷோரூம்கள் நாளை காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசுகள்

பரிசுகள்

ரூ.3.5 கோடி மதிப்புடைய சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு ஃபோர்டு வழங்க உள்ளது. மேலும், கார்களுக்கு சலுகைகள் வழங்குவதோடு, எல்இடி டிவி, வாஷிங் மிஷின் மற்றும் ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட ஏராளமான வீட்டு உபயோக பொருட்களை நிச்சய பரிசாக வாடிக்கையாளர்கள் குலுக்கல் முறையில் வெல்லும் வாய்ப்பும் இருக்கிறது.

ஃபோர்டு ஃபிகோ

ஃபோர்டு ஃபிகோ

ஃபிகோ காருக்கு இலவச இன்ஸ்யூரன்ஸ், எக்ஸ்சேஞ்ச் மற்றும் லாயல்டி போனஸ் அடங்கிய ரூ.58,000 மதிப்புடைய சலுகைகளை பெறலாம்.

ஃபோர்டு கிளாசிக்

ஃபோர்டு கிளாசிக்

கிளாசிக் காருக்கு இலவச இன்ஸ்யூரன்ஸ், எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் லாயல்டி போனஸ் உள்ளடக்கிய ரூ.69,000 மதிப்புடைய சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெறலாம்.

ஃபோர்டு ஃபியஸ்ட்டா

ஃபோர்டு ஃபியஸ்ட்டா

ஃபியஸ்ட்டா காருக்கு இலவச இன்ஸ்யூரன்ஸ் மற்றும் பணச் சலுகைகளை சேர்த்து ரூ.1.50 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகளை பெற முடியும்.

ஃபோர்டு எண்டெவர்

ஃபோர்டு எண்டெவர்

எண்டெவர் எஸ்யூவிக்கு ரூ.1.87 லட்சம் வரையில் சேமிக்கும் வாய்ப்பை ஃபோர்டு வழங்குகிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு முன்பதிவு தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், சலுகைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

நிபந்தனை

நிபந்தனை

காரை நாளை முன்பதிவு செய்து வரும் 31ந் தேதிக்குள் டெலிவிரி எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகைகள் பொருந்தும். கூடுதல் விபரங்களுக்கு அருகிலுள்ள ஃபோர்டு டீலரை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 4, 2013, 17:24 [IST]
English summary
On December 5, Ford dealerships across the country will be operational from 8 a.m. through midnight with exciting offers and assured gifts on every booking. All customers who book a Ford Figo, Classic, Fiesta or Endeavour on December 5 will also be eligible for assured gifts such as LED TVs, washing machines, refrigerators, microwave ovens and more.
மேலும்... #ford #four wheeler #போர்டு
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+