என்டெவருடன் மல்லுக்கட்ட பிரபலங்கள் ரெடி: பார்க்க நீங்க ரெடியா!

'மைஎன்டெவர்' என்ற பெயரில் ஒளிப்பரப்பாக இருக்கும் இந்த டிவி நிகழ்ச்சியில் 5 பிரபலங்கள் பங்கேற்கின்றனர். எழுத்தாளர் சேத்தன் பகத், படத்தயாரிப்பாளர் நாகேஷ் குக்குனூர், குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங், நடிகை குல்பணாக் மற்றும் நடிகர் ராஜிவ் கந்தேல்வால் ஆகியோர்தான் ஸ்பெஷல் எடிசன் ஃபோர்டு என்டெவர் ஆல்டெர்ரெய்ன் எஸ்யூவியை ஓட்டிப் பார்த்து தங்களது சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் விஜேந்தர் சிங் ராஜஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறார். மேலும், இந்திய-பாகிஸ்தான் எல்லையிலுள்ள ராணுவ வீரர் முகாமில் வீரர்களுக்கான பாட்டுப் பாடவும் விருப்பம் தெரிவித்துள்ளார். எழுத்தாளர் சேத்தன் பகத் குஜராத் மாநிலம் ஜுனாகரில் வாழும் பழங்குடி இன மக்களை நேரில் சந்திக்க உள்ளார்.
1995ல் தொடங்கி கைவிட்ட தனது பயணத்தை இந்த முறை நிறைவு செய்ய இருப்பதாக நாகேஷ் குக்குனூர் தெரிவித்திருக்கிறார். நடிகை குல்பணாக் கோவாவில் துவங்கி கர்நாடக மாநிலம் ஹம்பி வரை பயணம் செய்து என்டெவர் ஆல்டெர்ரெய்ன் எடிசன் எஸ்யூவி குறித்து பயண அனுபவங்களை நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
ராஜீவ் கந்தேல்வால் அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகரில் தனது பயணத்தை துவங்கி அருணாச்சல பிரதேச மாநிலம் பாசிகாட்டில் தனது பயணத்தை முடிக்கிறார். பிரபலங்களின் இந்த பயண அனுபவத் தொடர் வரும் மேமாதம் முதல் வாரம் ஒரு முறை நேஷனல் ஜியாகிராபி சேனலில் ஒளிப்பரப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications








