அடுத்த ஆண்டு 23 புதிய கார் மாடல்கள்: ஃபோர்டு அதிரடி!

By Saravana

அடுத்த ஆண்டு 23 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக ஃபோர்டு அறிவித்துள்ளது. மேலும், 70 சதவீத கார்களில் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டத்தை பொருத்தவும் முடிவு செய்துள்ளது.

இதன்மூலம் அதிக எரிபொருள் சிக்கனத்தையும், குறைந்த கார்பன் புகையையும் வெளியிடும் தன்மையுடன் ஃபோர்டு கார்கள் வர இருக்கின்றன.

புதிய மாடல்கள்

புதிய மாடல்கள்

அமெரிக்க மார்க்கெட்டில் 16 புதிய கார் மாடல்களை ஃபோர்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. அதில், புதிய மஸ்டாங், லிங்கன் எம்கேசி மற்றும் ட்ரான்சிட் கார்களும் அடங்கும். தவிரவும், 7 புதிய கார் மாடல்களும் பல்வேறு மார்க்கெட்டுகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இந்திய மாடல்கள்

இந்திய மாடல்கள்

புதிய ஃபிகோ காரையும், அதன் அடிப்படையிலான புதிய செடான் காரையும் இந்தியாவில் ஃபோர்டு அறிமுகம் செய்ய இருக்கும் முக்கிய மாடல்களாக கருதலாம்.

புதிய தொழில்நுட்பம்

புதிய தொழில்நுட்பம்

2017ம் ஆண்டிற்குள் தனது மொத்த உற்பத்தியில் 70 சதவீத கார்களை ஸ்டார்ட் ஸ்டார்ப் தொழில்நுட்பம் மற்றும் டைனமிக் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் கொண்டதாக விற்பனை செய்ய ஃபோர்டு முடிவு செய்துள்ளது. இந்த தொழில்நுட்பங்கள் மூலம் 10 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும்.

 புதிய ஈக்கோபூஸ்ட் எஞ்சின்

புதிய ஈக்கோபூஸ்ட் எஞ்சின்

அதிக எரிபொருள் சிக்கனம், குறைந்த கார்பன் புகை மற்றும் சிறப்பான பெர்ஃபார்மென்ஸ் என பன்முக சிறப்பு கொண்ட ஃபோர்டு ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின்கள் பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இதனால் உற்சாகம் அடைந்துள்ள ஃபோர்டு நிறுவனம் அடுத்த ஆண்டு மற்றுமொரு புதிய ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சினை அறிமுகம் செய்கிறது.

ஈக்கோபூஸ்ட் ஆரவாரம்

ஈக்கோபூஸ்ட் ஆரவாரம்

தற்போது இந்திய மார்க்கெட்டில் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் மட்டுமே 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சினுடன் விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் புதிய கார் மாடல்களில் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் கொண்டதாக அறிமுகம் செய்ய ஃபோர்டு திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 17, 2013, 11:28 [IST]
English summary
Ford, under its Blueprint for Sustainability initiative, has announced it will introduce Auto Start/Stop technology in 70 percent of its cars by the year 2017 in the United States. This announcement comes just ahead of the launch of the Fiesta hatchback with the 1.0 liter EcoBoost engine in the U.S, which will be the most fuel efficient petrol car in that market.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+