பிரேக் பிடிப்பதை எச்சரிக்கும் கருவி: ஃபோர்டு சோதனை

பிரேக் பிடிப்பதை பின்னால் வரும் வாகன ஓட்டிகள் தெரிந்து கொண்டு எச்சரிக்கையாக செயல்படும் வகையிலான புதிய தொழில்நுட்பத்தை ஃபோர்டு வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. பிரேக் பிடிக்கும்போது பின்னால் பொருத்தப்பட்டிருக்கும் டெயில் லைட் கிளஸ்ட்டரில் இருக்கும் சென்சார் இயங்கும். இந்த சென்சாரிலிருந்து, பின்னால் வரும் வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சிறிய கருவிக்கு சமிக்ஞைகள் அனுப்பப்படும்.

பின்னால் வரும் வாகனங்களின் டேஷ்போர்டில் பொருத்தப்பட்டிருக்கும் சிறிய இன்டிகேட்டர் லைட் அல்லது திரையின் மூலம் முன்னால் செல்லும் வாகனத்தின் டிரைவர் பிரேக் பிடிப்பதை தெரிந்து கொள்ளலாம். கண்ணுக்குத் தெரியாமல் அடுத்தடுத்து பின் தொடர்ந்து வரும் வாகனங்களுக்கும் இந்த எச்சரிக்கை கிடைக்கும் என்பதால், கூடுதல் பாதுகாப்பை வழங்கும் என ஃபோர்டு தெரிவித்துள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த சிம் டிடி என்ற நிறுவனம் இந்த புதிய தொழில்நுட்பத்தை சோதனை செய்துள்ளது. ஃபோர்டு எஸ்-மேக்ஸ் எம்பிவி காரில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு பல கட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இதில், வெற்றி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பின்னால் வரும் அனைத்து வாகனங்களிலும் இதற்கான தொழில்நுட்ப வசதி இருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்பதால் இது எந்தளவுக்கு வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஃபோர்டு புதிய பாதுகாப்பு தொழில்நுட்பம்
ஃபோர்டு புதிய பாதுகாப்பு தொழில்நுட்பம்

More from DriveSpark

Article Published On: Tuesday, June 25, 2013, 10:07 [IST]
English summary
Ford has successfully tested an inter-car communication technology which involves brake lights. The new Electronic Brake Lights, tested as part of the Safe Intelligent Mobility - Testfield Germany (simTD), communicate directly with cars behind it by sending a wireless signal which illuminates a dashboard light indicator.
மேலும்... #ford #four wheeler
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+