கான்செப்ட் மாடலை கூரையில் கட்டித் தொங்கவிட்டு அழகு பார்த்த ஃபோர்டு

டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் பார்வையாளர்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை நிபுணர்களின் கவனத்தை ஈர்க்க ஒவ்வொரு நிறுவனமும் பல புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், அட்லஸ் என்ற பெயரில் உயரிய தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட புதிய பிக்கப் டிரக்கை ஃபோர்டு அறிமுகம் செய்துள்ளது.

அமெரிக்காவில் நீண்ட காலமாக விற்பனையில் முன்னிலை வகிக்கும் எஃப்- 150 பிக்கப் டிரக்குக்கு மாற்றாக இந்த புதிய பிக்கப் டிரக் விற்பனைக்கு வரலாம் என்பது ஆட்டோமொபைல் துறையினரின் கணிப்பு. தனி நபர் மற்றும் தொழில்துறை என பன்முகப் பயன்பாடு கொண்ட இந்த பிக்கப் டிரக்கின் இன்டிரியர், இருக்கைகள் மிக உன்னதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. என்ன ஃபோர்டு அட்லஸ் பற்றிய கூடுதல் தகவல்கள் அறிந்து கொள்ள ஆவல் பிறக்கிறதா? கூடுதல் தகவல்களை படங்களுடன் பார்க்க அப்படியே ஸ்லைடருக்கு வாருங்கள்.

டெட்ராய்ட் ஷோவில் அறிமுகம்

டெட்ராய்ட் ஷோவில் அறிமுகம்

டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில்தான் இந்த புதிய கான்செப்ட் மாடல் பிக்கப் டிரக் பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டிருக்கிறது.

குறைந்த கார்பன் புகை

குறைந்த கார்பன் புகை

டைரக்ட் இன்ஜெக்ஷன் மற்றும் டர்போ சார்ஜர் கொண்ட ஈக்கோபூஸ்ட் எஞ்சின் 20 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என்பதோடு, 15 சதவீதம் குறைந்த கார்பன் புகையை வெளியிடும்.

ஆட்டோ கிரில் ஷட்டர்ஸ்

ஆட்டோ கிரில் ஷட்டர்ஸ்

எஞ்சினை குளிர்விக்க வேகத்துக்கு தகுந்தவாறு காற்றை உள்வாங்குவதற்கு இதன் முகப்பு கிரில்லுக்கு பின்புறத்தில் தானியங்கி ஷட்டர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. காற்றியக்கவியல் தத்துவத்தின்படி அதிவேகமாக செல்லும்போது இந்த ஷட்டர்கள் தானாக மூடிக்கொண்டு வேகமாக செல்ல உதவும்.

ஆக்டிவ் வீல் ஷட்டர்ஸ்

ஆக்டிவ் வீல் ஷட்டர்ஸ்

அதிவேகத்தில் செல்லும்போது சக்கரங்களில் பொருத்தப்பட்டிருக்கும் தானியங்கி ஷட்டர்கள் தானாக மூடிக்கொள்ளும். இதனால், தங்கு தடையின்றி செல்லும் என்பதால் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை கொடுக்கும்.

டிராப் டவுன் ஃப்ரண்ட் ஏர் டேம்

டிராப் டவுன் ஃப்ரண்ட் ஏர் டேம்

ஆஃப்ரோடு மற்றும் வேகத்தில் செல்வதற்கு ஏற்ற வகையில் டிராப் டவுன் ஏர்டேம் பொருத்தப்பட்டிருக்கிறது.

பவர் ரன்னிங் போர்டு

பவர் ரன்னிங் போர்டு

பயணிகள் கேபினுக்குள் ஏறி, இறங்க வசதியாக தானியங்கி முறையில் வெளியே வந்து செல்லும் ரன்னிங் போர்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. டிரக் செல்லும்போது இவை அடிப்பாகத்துக்குள் சென்றுவிடும்.

பன்முக பயன்பாட்டு டெயில் கேட்

பன்முக பயன்பாட்டு டெயில் கேட்

பொருட்களை வைப்பதற்கான இடத்தில் கூடுதல் நீளமுள்ள பொருட்களை வைப்பதற்கு ஏதுவாக இதன் டெயில் கேட்டை பயன்படுத்த முடியும். இதில், அட்ஜெஸ்ட்மென்ட் வசதியும் இருக்கிறது.

360 கேமரா

360 கேமரா

இந்த பிக்கப் டிரக்கில் 360 டிகிரி கேமரா பொருத்தப்பட்டிருப்பது ஓட்டுனருக்கு சிறந்த வசதியாக இருக்கும்.

எல்இடி லைட்டுகள்

எல்இடி லைட்டுகள்

எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி டெயில் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.

உற்பத்தி நிலை

உற்பத்தி நிலை

ஏராளமான வசதிகளை கொண்டிருக்கும் இந்த கான்செப்ட் மாடல் அட்லஸ் உற்பத்தி நிலைக்கு ஏற்ற மாடலாகவே இருப்பதால் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான சாத்தியம் அதிகம் இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 22, 2013, 12:39 [IST]
English summary
Ford has unveiled the Ford Atlas Concept at the ongoing Detroit auto show. The new concept is a glimpse at what could be the future Ford F-150 pickup. The Ford Atlas Concept previews the innovations that will transform what people expect from their pickup. With 36 years as America's best-selling pickup, we are absolutely committed to setting the agenda in the truck market." said Raj Nair, Ford group vice president, Global Product Development.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+