எலக்ட்ரிக் ஃபார்முலா- 1 போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு!
அடுத்த ஆண்டு முதல்முறையாக நடைபெற இருக்கும் எலக்ட்ரிக் ஃபார்முலா- 1 போட்டிகளுக்கான கால அட்டவணை மற்றும் அணிகளின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா உள்பட மொத்தம் 10 அணிகள் எலக்ட்ரிக் ஃபார்முலா-1 கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ளன. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கும் எலக்ட்ரிக் ஃபார்முலா- 1 கார் பந்தயங்கள் 2015ம் ஆண்டு ஜூன் மாதம் வரை நடைபெற உள்ளது.
அணிகள் விபரம்
1.டிரேசன் ரேஸிங் ஃபார்முலா இ டீம்(இங்கிலாந்து)
2. சீனா ரேஸிங் ஃபார்முலா இ டீம்(சீனா)
3. அன்ரெட்டி ஆட்டோஸ்போர்ட் ஃபார்முலா இ டீம்(அமெரிக்கா)
4.டிராகன் ரேஸிங் இ டீம் (அமெரிக்கா)
5.இ.டேம்ஸ் ஃபார்முலா இ டீம் (பிரான்ஸ்)
6. சூப்பர் அகுரி ஃபார்முலா இ டீம் (ஜப்பான்)
7.ஆடி ஸ்போர்ட் ஏபிடி ஃபார்மலா இ டீம் (ஜெர்மனி)
8.மஹிந்திரா ரேஸிங் ஃபார்முலா இ டீம் (இந்தியா)
9.வெர்ஜின் ரேஸிங் ஃபார்முலா இ டீம் (இங்கிலாந்து)
10.வென்ச்சுரி ஃபார்முலா இ டீம் (மொனாக்கோ)
முதல் ஆண்டு போட்டிகள் 10 சுற்றுகளாக நடைபெற இருக்கின்றன. அதுபற்றிய விபரங்கள்,
முதல் சுற்று: பீஜிங், சீனா - செப்டம்பர் 13, 2014.
2- வது சுற்று: புட்ரஜெயா, மலேசியா - அக்டோபர் 18, 2014.
3- வது சுற்று: ரியோடி ஜெனிரோ, பிரேசில் நவம்பர் 15, 2014.
4- வது சுற்று: புன்ட்டா டெல் எஸ்டே, உருகுவே - டிசம்பர் 13, 2014.
5- வது சுற்று: பியூனாஸ் ஏர்ஸ், அர்ஜெண்டினா - ஜனவரி 10, 2015.
6- வது சுற்று: லாஸ் ஏஞ்சல்ஸ் - பிப்ரவரி 14, 2015.
7- வது சுற்று: மியாமி அமெரிக்கா - மார்ச் 14, 2015.
8- வது சுற்று: மோன்டே கார்லோ, மொனாகோ - மே 9, 2015.
9-வது சுற்று: பெர்லின், ஜெர்மனி - மே 30, 2015.
10-வது சுற்று: லண்டன், இங்கிலாந்து - ஜூன் 27, 2015.


Click it and Unblock the Notifications








