உலகின் முதல் எலக்ட்ரிக் ஃபார்முலா-1 கார்: கிழி கிழியென கிழிக்கப் போகிறது

எலக்ட்ரிக் ரேஸ் கார்களுக்கான ஃபார்முலா- 1 பந்தயம் அடுத்த மாதம் துவங்க உள்ளது. இதற்கான, முதல் எலக்ட்ரிக் ரேஸ் கார் அடுத்த மாதம் பிராங்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் பார்வையாளர்களுக்கு காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

பெட்ரோலில் இயங்கும் ஃபார்முலா- 1 கார் பந்தயம் போன்றே இந்த எலக்ட்ரிக் கார்களுக்கான ஃபார்முலா- 1 பந்தயங்களும் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் நடத்தப்படும். இதில், ஃபார்முலா- 1 பந்தயங்களில் பங்கேற்கும் சில பிரபல அணிகளும் களமிறங்க உள்ளன.

ரெனோ கூட்டணி

ரெனோ கூட்டணி

முதன்முதலாக துவங்கும் இந்த முதல் ஃபார்முலா -1 பந்தயத்துக்கான எலக்ட்ரிக் ரேஸ் காரை ரெனோ மற்றும் ஸ்பார்க் கூட்டணி இணைந்து வடிவமைத்துள்ளன. இதற்கு எஸ்ஆர்டி_01இ ஃபார்முலா இ என்ற பெயரிடப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு நுட்பம்

கட்டுப்பாட்டு நுட்பம்

இந்த புதிய பார்முலா-1 எலக்ட்ரிக் கார் சேஸீயை உருவாக்கியதோடு, எலக்ட்ரிக் ஃபார்முலா- 1 கார்களுக்கான எலக்ட்ரானிக் கன்ட்ரோல் தொழில்நுட்பத்தை உருவாக்குவதிலும் ரெனோ முக்கிய பங்கு வகிக்கும்.

300 எச்பி மோட்டார்

300 எச்பி மோட்டார்

எலக்ட்ரிக் ஃபார்முலா- 1 கார்களில் 300எச்பி சக்தியை வெளிப்படுத்தும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும்.

ஃபார்முலா- 1 லிருந்து ஏராளம்

ஃபார்முலா- 1 லிருந்து ஏராளம்

ஃபார்முலா- 1ல் பயன்படுத்தப்படும் பெட்ரோல் கார்களில் பயன்படுத்தப்படும் ஏராளமான தொழில்நுட்பங்கள் இந்த எலக்ட்ரிக் ரேஸ் கார்களிலும் பயன்படுத்தப்படும்.

முதல் ரேஸ்

முதல் ரேஸ்

முதல் எலக்ட்ரிக் ஃபார்முலா- 1 கார் பந்தயத்தில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும். ஆனால், எலக்ட்ரிக் ஃபார்முலா-1 கார் பந்தயத்தில் பங்கேற்க மொத்தம் 18 அணிகள் விருப்பம் தெரிவித்துள்ளன. மேலும், ஃபார்முலா- 1 பந்தயங்கள் போன்றே ஒவ்வொரு அணியும் தலா 2 டிரைவர்களை வைத்துக்கொள்ள அனுமதி உண்டு.

அணிகள்

அணிகள்

எலக்ட்ரிக் ரேஸ் கார் ஃபார்முலா-1 பந்தயத்தில் பங்கேற்பதற்கு 3 அணிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ரெனோ, இன்டிகார் ரேஸிங் டீம் மற்றும் அன்டிரெட்டி ஆட்டோஸ்போர்ட் ஆகியவையாகும்.

போட்டி அட்டவணை

போட்டி அட்டவணை

அடுத்த மாதம் துவங்கி 2015ம் ஆண்டு ஜூன் வரை உலகின் பல்வேறு நாடுகளில் எலக்ட்ரிக் ரேஸ் கார்களுக்கான ஃபார்முலா- 1 பந்தயங்களுக்கான போட்டிகள் நடைபெறும். பேங்காக், பீஜிங், பீனோஸ் ஏர்ஸ், லண்டன், ரோம், லாஸ் ஏஞ்சல்ஸ், மியாமி, புட்ரஜெயா, ரியோ டி ஜெனீரோ மற்றும் பெர்லின் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

 டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

ஃபார்முலா- 1 எலக்ட்ரிக் கார்கள் அதிகபட்சமாக மணிக்கு 217 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டவையாக இருக்கும்.

ஒரு போட்டிக்கு 2 கார்கள்

ஒரு போட்டிக்கு 2 கார்கள்

ஒரு போட்டியில் ஒரு டிரைவர் 2 கார்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். பேட்டரி சார்ஜ் மூலம் ஒரு கார் 25 நிமிடங்கள் செல்லும். மொத்தம் ஒரு மணி நேரம் கொண்டதாக போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

ஒரே நாள் மட்டும்

ஒரே நாள் மட்டும்

ஃபார்முலா- 1 பந்தயங்கள் தற்போது 3 நாட்கள் நடத்தப்படும் நிலையில், எலக்ட்ரிக் ஃபார்முலா- 1 பந்தயங்களுக்கான தகுதிச் சுற்று மற்றும் இறுதிச் சுற்றுப் போட்டிகள் ஒரே நாளில் நடைபெறும்.

முதல் கார் அறிமுகம்

முதல் கார் அறிமுகம்

ரெனோ- ஸ்பார்க் வடிவமைத்துள்ள முதல் எலக்ட்ரிக் கார் அடுத்த மாதம் 10ந் தேதி பிராங்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 6, 2013, 14:38 [IST]
English summary
Apart from the multitude of conventional vehicles that visitors to the Frankfurt Auto Show in September will get to see, on display will be the first Formula E race car chassis. Formula E is an electric car racing series which is scheduled to debut in September 2014.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+