ஆன்லைனில் பாகங்களை வாங்கி எஃப்-1 கார் தயாரித்த கில்லாடி!

Formula One Car
ஆன்லைன் தளம் மூலம் பழைய பாகங்களை வாங்கி பார்முலா-1 காரை தயாரித்துள்ளார் இங்கிலாந்தை சேர்ந்த கில்லாடி இளைஞர் ஒருவர்.

இங்கிலாந்தை சேர்ந்த கெவின் தாமஸ் பார்முலா-1 கார் பந்தயங்களின் பரம விசிறி. ஒருமுறை ரெனோ கார் ஷோரூமுக்கு சென்றபோது அங்கு நின்றிருந்த பார்முலா-1 காரை பார்த்ததும்தான் கெவினுக்கு சொந்தமாக பார்முலா-12 காரை வடிவமைக்கும் ஐடியா வந்ததாம்.

இ-பே ஆன்லைன் மூலமாகவும், பார்முலா-1 கார் பாகங்களை சேகரிக்கும் ஒரு அமைப்பு மூலமாகவும் தனது கனவுக் காருக்கான பாகங்களை வாங்கியுள்ளார். விறுவிறுவென வீட்டிலேயே காரின் பாகங்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால், பார்முலா-1 கார் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் பற்றி போதிய அறிவு, அனுபவம் இல்லாததால் பல்வேறு தடங்கல்கள் மற்றும் சிக்கல்களை சந்தித்துள்ளார். இருப்பினும், தனது அதீத ஆர்வத்தால் மிகுந்த சிரத்தையுடன் பாகங்களை ஒன்று சேர்த்து இந்த காரை உருவாக்கியிருக்கிறார்.

தற்போது இந்த காருக்கான எஞ்சினை இ-பே தளம் மூலம் வாங்குவதற்காக காத்திருக்கிறார். ரெனோவின் 3.5 லிட்டர் எஞ்சினை தனது கனவு பார்முலா-1 காரில் பொருத்துவதற்கு முடிவு செய்துள்ளார். இந்த காருக்கு இதுவரை 13,000 டாலர் செலவாகியிருப்பதாக கெவின் தாமஸ் தெரிவித்துள்ளார்.

More from DriveSpark

Article Published On: Friday, January 4, 2013, 13:14 [IST]
English summary
Ever wondered of owning your own Formula 1 race car? Kevin Thomas from England is one such man who had a dream to put together a Formula 1 race car. It gets even more interesting when you learn that this F1 addict has put together a Formula 1 race car by purchasing various parts through ebay as well as through a community of F1 parts collectors.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+