பிரான்ஸில் சில பென்ஸ் கார்களின் விற்பனைக்கு தடை

குளிர்சாதனத்தில் ஆர்134ஏ என்ற நச்சுத் தன்மை வாய்ந்த கூலண்ட் பயன்படுத்தப்படுவதாகவும், கார்பன் புகையை விடவும் இது 1,400 மடங்கு நச்சுத் தன்மை வாய்ந்ததாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கடந்த மாத மத்தியிலிருந்து தயாரிக்கப்பட்ட மேற்கண்ட கார்களுக்கு இந்த தடை அமலுக்கு வந்துள்ளதாக பிரான்ஸ் நாட்டின் மெர்சிடிஸ் பென்ஸ் டீலர்ஷிப் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், பிரான்ஸ் நாட்டில் 95 கார்களில் இதே கூலண்ட் ஏர்கண்டிஷனர்களில் பயன்படுத்தப்படுவதாகவும், ஆனால், பிரான்ஸ் அரசு பென்ஸ் நிறுவனத்தை மட்டும் குறிவைத்து இந்த தடையை விதித்துள்ளதாகவும் குற்றம் சாட்டி இருக்கிறார்.
ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக கார் விற்பனை மிகவும் மோசமான கட்டத்தில் இருக்கும் நிலையில், இந்த தடை பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது," என்று பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, நீதிமன்றத்தில் அணுகி அந்த வழக்கில் பென்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்துவிட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவை புறக்கணித்துள்ள அந்நாட்டு சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் பென்ஸ் கார்களுக்கான தடையை நீக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டது.
இந்த தடை காரணமாக பென்ஸ் கார்களை வாங்கிய 2,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் தங்களது காரை பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








