நிசானின் புதிய எக்ஸ்ட்ரெயில் எஸ்யூவி அறிமுகம்

By Saravana

புதிய நிசான் எக்ஸ்ட்ரெயில் எஸ்யூவி பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. நிசான் தலைவர் கார்லோஸ் கோஸ்ன் இந்த புதிய எஸ்யூவியை அறிமுகம் செய்தார்.

டிசைன், தொழில்நுட்பம் என அனைத்து விதத்திலும் புதுமைகளை உடுத்தி வந்திருக்கும் நிசான் எக்ஸ்ட்ரெயில் நிசான் - ரெனோ கூட்டணியின் புதிய கட்டமைப்பு பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

கொஞ்சம் பெரிசு

கொஞ்சம் பெரிசு

முந்தைய மாடலைவிட நீளத்தில் 30 மிமீ, அகலத்தில் 55 மிமீ மற்றும் வீல் பேஸில் 155 மிமீ வரை கூடியிருக்கிறது. புதிய தலைமுறை எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும் வகையில் ஸ்டைலாகவும், பிரிமியமாகவும் வந்திருக்கிறது எக்ஸ்ட்ரெயில். 19 இஞ்ச் அலாய் வீல்களும் அழகு சேர்க்கிறது.

எல்இடி ஹெட்லைட்

எல்இடி ஹெட்லைட்

எல்இடி ஹெட்லைட்டுகளும் புதிய எக்ஸ்ட்ரெயிலின் கூடுதல் சிறப்பம்சமாக கூறலாம்.

பூமராங் ஸ்பெஷல்

பூமராங் ஸ்பெஷல்

முந்தைய மாடலைவிட மிக கவர்ச்சியாக மாறியுள்ளது. பின்புற டெயில் லைட் பூமராங் ஆயுத வடிவத்தை பெற்றுள்ளது.

4 வீல் டிரைவ்

4 வீல் டிரைவ்

புதிய எக்ஸ்ட்ரெயில் எஸ்யூவி நவீன எலக்ட்ரானிக் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. சென்ட்ரல் கன்சோலில் இருக்கும் திருகு மூலம் டிரைவர் 4 வீல் டிரைவ் சிஸ்டத்தை மாற்றிக் கொள்ளலாம்.

வசதிகள்

வசதிகள்

இன் கார் நேவிகேஷன், தகவல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள், ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆஃப்ரோடர்

ஆஃப்ரோடர்

ஆஃப்ரோடு தகவமைப்பு கொண்ட இந்த பிரிமியம் எஸ்யூவியில் 7 பேர் பயணம் செய்யும் வசதி கொண்டது.

 விற்பனை

விற்பனை

அடுத்த ஆண்டு முதல் 190 நாடுகளில் இந்த புதிய எக்ஸ்ட்ரெயில் விற்பனைக்கு செல்ல இருப்பதாக நிசான் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 11, 2013, 13:42 [IST]
English summary
The New Nissan X-Trail has been unveiled by President and CEO, Carlos Ghosn at the Frankfurt Motor Show. Nissan is on a constant stride to deliver innovation and the new X-Trail is another step forward to this commitment.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+