இந்த ஆண்டு 6 புதிய மாடல்களை களமிறக்கும் ஸ்கோடா

By Saravana

இந்த ஆண்டு சர்வதேச மார்க்கெட்டில் 6 புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது ஸ்கோடா ஆட்டோ. தரமான கட்டுமானம் கொண்ட கார்களை தயாரிப்பதில் புகழ்பெற்ற ஸ்கோடா போட்டியாளர்களால் பெரிதும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது. எனவே, தனது தயாரிப்புகளை மேம்படுத்தி வருகிறது. தவிர, புதிய மாடல்களையும் இந்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளது.

புதிய சூப்பர்ப், 2013 ஆக்டாவியா, ஃபேபியா உள்ளிட்ட மாடல்கள் இதில் அடக்கம். கூடுதல் அம்சங்களுடன் வரும் புதிய மாடல்கள் நிச்சயம் தனது விற்பனையில் ஏற்றம் கொடுக்கும் என ஸ்கோடா நம்புகிறது. சர்வதேச மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படும் அனைத்து மாடல்களும் இந்திய மார்க்கெட்டிலும் அடுத்தடுத்து அறிமுகம் செய்ய ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு ஸ்கோடா அறிமுகம் செய்யும் கார் மாடல்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

2013 சூப்பர்ப்

2013 சூப்பர்ப்

இன்னும் ஓரிரு ஆண்டுகளில் புதிய சூப்பர்ப் காரை ஸ்கோடா அறிமுகப்படுத்த உள்ளது. அதற்கு முன்னதாக தற்போதைய சூப்பர்ப் மாடலில் சிறிது மாற்றங்களுடன் புதுப்பொலிவு கொடுத்து ஆகஸ்ட்டில் அறிமுகப்படுத்துகிறது ஸ்கோடா. எஞ்சினில் மாற்றங்கள் இருக்காது. 160 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 140 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது.

2013 ஆக்டாவியா(லாரா)

2013 ஆக்டாவியா(லாரா)

புதிய ஆக்டாவியா எம்கே3 காரை இந்த ஆண்டு மத்தியில் அறிமுகப்படுத்துகிறது ஸ்கோடா. 120 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் எஞ்சின் மற்றும் 177 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.8 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் மாடல்களில் வருகிறது. இந்தியாவில் லாரா பிராண்டில் விற்பனைக்கு வர இருக்கிறது.

2013 ஃபேபியா

2013 ஃபேபியா

நல்ல ஹேட்ச்பேக் காராக இருந்தும் மார்க்கெட்டில் முக்கிய இடம் கிடைக்காமல் ஃபேபியா தவிக்கிறது. வாடிக்கையாளரை கவரும் வகையில் ஃபேபியாவை புதுப்பொலிவுடனும், கூடுதல் அம்சங்களுடனும் வரும் பண்டிகை காலத்தில் அறிமுகம் செய்கிறது ஸ்கோடா. 1.2 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட பெட்ரோல் மாடல்களிலும், 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட மாடலிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

ஆக்டாவியா விஆர்எஸ்

ஆக்டாவியா விஆர்எஸ்

மேம்படுத்தப்பட்ட ஸ்போர்ட்டி வெர்ஷன் ஆக்டாவியா மாடலையும் இந்த ஆண்டு அறிமுகம் செய்கிறது ஸ்கோடா. இது ஆட்டோமொபைல் பிரியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் காராக இருக்கும்.

 ஆக்டாவியா ஸ்டேஷன் வேகன்

ஆக்டாவியா ஸ்டேஷன் வேகன்

ஆக்டாவியா காரின் ஸ்டேஷன் வேகன் காரையும் இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது ஸ்கோடா. இதன்மூலம், விற்பனையில் முன்னிலை வகித்து இடத்தை இழந்த ஆக்டாவியாவின் மார்க்கெட்டை மீண்டும் பிடித்து விட முடியும் என்று ஸ்கோடா நம்புகிறது.

2013 யெட்டி எஸ்யூவி

2013 யெட்டி எஸ்யூவி

இந்த ஆண்டு இறுதியில் யெட்டி எஸ்யூவியில் சில மாற்றங்களுடன் அறிமுகப்படுத்த இருக்கிறது ஸ்கோடா. யெட்டியின் குறைந்த விலை வேரியண்ட்டை களமிறக்கும் திட்டமும் ஸ்கோடாவிடம் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 10, 2013, 11:20 [IST]
English summary
Skoda Auto, the Czech car maker owned by Volkswagen Ag is set for a product blitzkrieg in 2013.
 
மேலும்... #four wheeler #ஸ்கோடா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+