1.14 லட்சம் செவர்லே தவேரா கார்களை திரும்ப அழைக்கும் ஜிஎம்!
மாசுக் கட்டுப்பாடு அளவுகளில் இருக்கும் பிரச்னை காரணமாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 1.14 லட்சம் தவேரா எம்பிவி கார்களை ஜெனரல் மோட்டார்ஸ் திரும்ப அழைத்துள்ளது.
கடந்த மாதம் முதல் தவேரா மற்றும் செயில் யுவா, செயில் செடான் கார்களின் உற்பத்தியை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுத்தி வைத்துள்ளது. ஆனால், இதற்கான காரணங்கள் குறித்து ஜெனரல் மோட்டார்ஸ் எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்த நிலையில், தவேரா கார்களை திரும்ப அழைப்பதாக நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

1.14 லட்சம் கார்கள்
இந்திய ஆட்டோமொபைல் வரலாற்றிலேயே கார்களுக்கு அறிவிக்கப்பட்ட மிகப்பெரிய ரீகால் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மாடல்கள்
பிஎஸ்- 3 மாசுக்கட்டுப்பாட்டு அம்சம் கொண்ட 2.5 லிட்டர் எஞ்சின் மாடலும், பிஎஸ் - 4 அம்சம் கொண்ட 2.0லி எஞ்சின் மாடலும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன.

தயாரிப்பு ஆண்டு
2005ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட முந்தைய ஸ்லைடரில் தெரிவிக்கப்பட்ட மாடல்கள் திரும்ப அழைக்கப்பட உள்ளன.

செயிலிலும் பிரச்னை
தவேரா உற்பத்தி தவிரவும், தரக்கட்டுப்பாடு காரணமாக செயில் யுவா மற்றும் செயில் செடான் கார்களின் உற்பத்தியையும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுத்தி வைத்திருக்கிறது. இந்த வாரத்தில் செயில் கார்களின் உற்பத்தி மீண்டும் துவங்க இருப்பதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

பாதிப்பு
விற்பனையில் சோபிக்க முடியாமல் தவித்து வரும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு இந்த ரீகால் அறிவிப்பு மற்றும் தர பிரச்னைகளால் பிராண்டு மதிப்பில் மேலும் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








