ரிப்பேரான காருக்கு பதில் புதிய காரை வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு

Opel Astra
வாடிக்கையாளருக்கு பிரச்னைக்குரிய காரை விற்பனை செய்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் புதிய காரை வழங்குமாறு நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் லலித் பாசின். கடந்த 2000ம் ஆண்டு டெல்லியிலுள்ள ஜெனரல் மோட்டார்ஸின் அங்கீகாரம் பெற்ற டீலரிடமிருந்து ஓபல் அஸ்ட்ரா செடான் காரை ரூ.8 லட்சம் கொடுத்து வாங்கினார். வாங்கி ஒரு மாதத்திலேயே அந்த கார் ரிப்பேர் ஆனது.

உடனே, சம்பந்தப்பட்ட டீலர்ஷிப்புக்கு கொண்டு சென்றார். அங்கு காரை சரிசெய்து கொடுத்தனர். ஆனால், திரும்பவும் தொடர்ந்து பிரச்னை கொடுத்தது. இதுபோன்று , 20 முறை அந்த டீலர்ஷிப்புக்கு எடுத்துச் சென்றும் பழுது சரியாகவில்லை. அதுவும் ஆண்டுக்கணக்கில் இழத்தடித்தும் பலனில்லை. அதன் பின்னர் லலித் அந்த காரை ஓரம் கட்டிவிட்டார்.

இதுதொடர்பாக, நுகர்வோர் ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை விசாரித்த நுகர்வோர் ஆணையம் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் புதிய காரை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. இல்லாவிட்டால், காருக்குரிய ரூ.8 லட்சத்தை லலித் பாசினிடம் வழங்குமாறு உத்தரவில் தெரிவித்துள்ளது.

மேலும், காரை சரியாக பழுதுநீக்காமல் லலித்தை 20 முறை அலைகழிக்க விட்ட டீலருக்கு ரூ.3.67 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்த அபராத தொகையை அலைச்சலுக்கும், மன உளைச்சலுக்கும் சேர்த்து லலித் பாசினிடம் வழங்குமாறு உத்தரவில் கூறியிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 12, 2013, 13:28 [IST]
English summary
Lalit Bhasin, an advocate from Delhi purchased an Opel Astra Club sedan 13 years back, in 2000, from an authorized General Motors India dealership. Unfortunately for Bhasin, the car started giving problems from the very first month of buying it. The problems with the vehicle were severe and consistent, and existed till the car finally broke down for the last time in 2008-09.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+