மே மாதம் ஜெனரல் மோட்டார்ஸ் கார் விற்பனை அதிகரிப்பு

இதுதவிர, கடந்த மாதம் 2,177 என்ஜாய் எம்பிவி கார்களையும் விற்பனை செய்துள்ளதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்து இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் இருக்கிறது.
கடந்த மாதம் 8,500 கார்களை செவர்லே பிராண்டில் ஜெனரல் மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 40 சதவீதம் கூடுதல் வளர்ச்சியாகும். கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட கையோடு, என்ஜாய் எம்பிவி காரும் குறிப்பிடத்தக்க விற்பனையை பதிவு செய்துள்ளது.
கடந்த மாதம் 2,177 என்ஜாய் எம்பிவி கார்கள், 2,851 செவர்லே செயில் (ஹெட்ச்பேக் மற்றும் செடான் இரண்டும் சேர்த்து), 1,506 பீட் கார்கள் மற்றும் 1,475 தவேரா கார்களை விற்பனை செய்துள்ளதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








