சத்தமில்லாமல் வந்த மேம்படுத்தப்பட்ட செவர்லே கேப்டிவா!

By Saravana

பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவிக்கும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட செவர்லே கேப்டிவா எஸ்யூவியை சத்தமில்லாமல் இந்தியாவுக்குள் கொண்டு வந்துள்ளது. எந்தவொரு விழாவும் இல்லாமல் தனது இணையதள பக்கத்தில் புதிய கேப்டிவா குறித்த தகவல்களை வெளியிட்டிருக்கிறது.

கடந்த மார்ச்சில் ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மேம்படுத்தப்பட்ட கேப்டிவா சிறிய அளவிலான மாறுதல்களுடன், புதிய எஞ்சினுடன் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளது. அதேவேளை, அடுத்த சில நாட்களில் இந்த எஸ்யூவியை பிரபலப்படுத்தும் நோக்கில் விளம்பரங்களை அந்த நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 வெளிப்புற மாற்றம்

வெளிப்புற மாற்றம்

மேம்படுத்தப்பட்ட மாடல் என்பதால் பம்பர், கிரில் ஆகியவற்றில் மட்டும் சிறிய மாறுதல்களை ஜெனரல் மோட்டார்ஸ் செய்துள்ளது. 18 இஞ்ச் அலாய் வீல்கள்,பின்புற பம்பருடன் இணைந்த டூயல் எக்சாஸ்ட் பைப்புகள், புதிய எல்இடி லைட்டுகள் அடங்கிய டெயில் லைட் கிளஸ்ட்டர் ஆகியவற்றால் புதுமை தெரிகிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

உட்புறத்தில் புதிய ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரி மற்றும் புதிய மல்டிமீடியா டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது.

வசதிகள்

வசதிகள்

ரெயின் சென்சிங் வைப்பர், டூயல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம், ஆட்டோமேட்டிக் லெவல் ரைடு சஸ்பென்ஷன், கீ லெஸ் ஸ்டார்ட் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் இருக்கின்றன.

எஞ்சின்

எஞ்சின்

முந்தைய 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு மாற்றாக 186.5 பிஎஸ் பவரையும், 424 என்எம் டார்க்கையும் அளிக்கும் புதிய 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும். இதுதவிர, 2 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் அடாப்டிவ் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல்களிலும் தேர்வு செய்யலாம்.

மைலேஜ்

மைலேஜ்

மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல் லிட்டருக்கு 14.6 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 12.12 கிமீ மைலேஜையும் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை

விலை

இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ள கேப்டிவாவுக்கு ரூ.23,49,802 எக்ஸ்ஷோரூம் விலையாக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 14, 2013, 17:48 [IST]
English summary
Amidst all the troubles GM India is presently facing it has managed to introduce the Chevrolet Captiva facelift in India, but it decided to do so with zero fanfare. The only indication is the updated Chevy website. We do, however, expect GM to run a few ads, advertising the arrival of the facelift in the next few days.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+