தானியங்கி காற்றழுத்த நுட்பத்துடன் புதிய வாகன டயர்

வாகன டயர்களில் காற்றழுத்ததை சீராக பராமரிப்பது மிகவும் அவசியமான ஒன்று. கூடுதல் மைலேஜ், பாதுகாப்பான பயணம் ஆகிய அனைத்திற்கும் டயரில் சீரான காற்றழுத்தம் இருக்க வேண்டியது அவசியம்.
இந்த நிலையில், டயரில் காற்றழுத்தத்தை அவ்வப்போது பரிசோதனை செய்வது வாகன ஓட்டிகளுக்கு பெரிய வேலையாக இருக்கிறது. இந்த குறையை போக்கும் விதத்தில் தானியங்கி முறையில் காற்றழுத்தை சீராக பராமரிக்கும் புதிய தொழிநுட்பத்துடன் கூடிய டயரை குட்இயர் நிறுவனம் வடிவமைத்துள்ளது.
இந்த டயரின் டியூபின் உட்புறத்தில் சிறிய சாதனம் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. டயரில் காற்றின் அழுத்தம் குறைவது தெரிந்தால், வாகனத்தின் டயர் உருளும்போது வெளியிலிருந்து காற்றை தானியங்கி முறையில் காற்றை உள்ளிழுத்து டியூபில் காற்றின் அழுத்தத்தை சீரான அளவில் பராமரிக்கும்.
டயரில் காற்றழுத்தம் குறைவதால் மைலேஜும் குறையும். இந்த புதிய தொழில்நுட்பம் கொண்ட டயர் மூலம் எரிபொருள் விரயம் தவிர்க்கப்படும் என்பதால் பொருளாதார ரீதியில் இந்த தொழில்நுட்பம் மிக முக்கியமானதாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








