எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டம்: ஏப்ரல் முதல் அமல்?

By Saravana

எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் மானியம் வழங்கும் திட்டத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைக்கும் வகையில் பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Mahindra E2O

இதற்காக, மிகப்பெரிய அளவிலான மானியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. அடுத்த 7 ஆண்டுகளில் ரூ.12,000 கோடியை இந்த திட்டத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது.

இதன்மூலம், 2020ம் ஆண்டில் 7 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்யவதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளது. முதல் ஆண்டில் மட்டும் ரூ.2,000 கோடி மானியம் வழங்கப்பட உள்ளது. பேட்டரியில் இயங்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு இந்த மானியம் வழங்கப்படும்.

மும்பையில் நடந்த கூட்டத்தில் மத்திய கனரக தொழிற்துறை அமைச்சகமும், சியாம் அமைப்பும் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து மத்திய நிதி அமைச்சகத்துடன் மத்திய கனரக தொழிற்துறை அமைச்சகம் விரைவில் பேச்சு நடத்த உள்ளது. எனவே, இத்திட்டம் ஏப்ரல் முதல் செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 30, 2013, 14:03 [IST]
English summary
The National Electric Mobility Mission Plan (NEMMP), the initiative under which the government would provide subsidy to electric vehicles, was announced two years ago. But the plan has not been implemented yet, having been held due to various reasons, including economic slowdown.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+