குவாட்ரிசைக்கிளுக்கான புதிய எஞ்சின் தயாரித்த கிரீவ்ஸ் காட்டன்

By Saravana

குவாட்ரிசைக்கிள் வாகனங்களுக்கு பொருத்துவதற்கு ஏற்ற புதிய பெட்ரோல் எஞ்சினை கிரீவ்ஸ் காட்டன் தயாரித்துள்ளது.

மூன்று சக்கர வாகனங்களுக்கான உதிரி பாகங்களை சப்ளை செய்வதில் கிரீவ்ஸ் காட்டன் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது.

Bajaj RE60

இந்த நிறுவனம் 265சிசி திறன் கொண்ட புதிய பெட்ரோல் எஞ்சினை வடிவமைத்துள்ளது. இந்த புதிய எஞ்சினை விரும்பும் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படைியல் சப்ளை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

புதிய பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த எஞ்சினை சிஎன்ஜியில் இயங்கும் வகையிலும் மாற்றிக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கிரீவ்ஸ் காட்டன் சிஇஓ சுனில் பஹிலஜனி கூறுகையில்,"பல்வேறு நிறுவனங்கள் குவாட்ரிசைக்கிள் வாகன தயாரிப்பில் ஈடுபடுதவற்கு திட்டமிட்டுள்ளன.

அவற்றிற்கு ஏதுவாக புதிய பெட்ரோல் எஞ்சினை உருவாக்கி உற்பத்திக்கு தயார் நிலையில் வைத்துள்ளோம். விருப்பம் தெரிவிக்கும் நிறுவனங்களுக்கு சப்ளை செய்வோம்," என்று தெரிவித்துள்ளார்.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மட்டும் ஆர்இ60 என்ற புதிய குவாட்ரிசைக்கிள் வாகனத்தை தயாரித்துக்கொண்டு விற்பனைக்கு விடுவதற்கு அரசு அனுமதிக்காக காத்திருக்கிறது.

ஆனால், கார் நிறுவனங்களின் எதிர்ப்பு காரணமாக அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், பியாஜியோ, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் குவாட்ரிசைக்கிள் தயாரிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Saturday, September 28, 2013, 16:41 [IST]
English summary
Even as a heated debate rages on regarding the technical specifications of quadricycles among automakers, India's largest three-wheeler engine supplier Greaves CottonBSE -0.09 % is ready with a 265 cc petrol engine to help automakers foray into quadricycles, once given a go-ahead by the government . 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+