தில்லுமுல்லு... உலகின் அதிவேக கார் டைட்டிலை இழந்த புகாட்டி வேரோன்!
உலகின் அதிவேக கார் என்ற சாதனைப் பதிவிலிருந்து புகாட்டி வேரோன் காரை நீக்கியிருக்கிறது கின்னஸ் அமைப்பு. கடந்த 2010ம் ஆண்டு உலகின் அதிவேக உற்பத்தி நிலை காராக புகாட்டி வேரோன் கின்னஸில் இடம் பிடித்தது. அதிகபட்சமாக மணிக்கு 431.072 கிமீ வேகத்தை தொட்டு இந்த சாதனையை பதிவு செய்தது.
இந்த நிலையில், சமீபத்த்தில் ஹென்னிஸி வெனோம் ஜிடி கார் உலகின் அதிக வேக சாதனையை படைத்தது. ஆனால், இந்த சாதனையை கின்னஸ் ஏற்கவில்லை. ஏனெனில், கின்னஸ் சாதனையில் இடம்பிடிக்கும் அதிவேக கார்கள் காற்றின் எதிர்திசை மற்றும் நேர்திசை என இரண்டு முறை பயணிக்கும் சராசரி வேகம் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும்.
ஆனால், ஹென்னிஸி வேனோம் ஜிடி ஒருமுறை மட்டுமே குறிப்பிட்ட தூரத்தை கடந்ததால் இந்த சாதனையை கின்னஸ் ஏற்கவில்லை. இதனால், அதிருப்தியடைந்த ஹென்னிஸி ஒரு புகாரை கின்னஸ் அமைப்பிடம் வழங்கியது. அதில், புகாட்டி வேரோன் கார் அந்த வேகத்தை எட்டியிருக்க வாய்ப்பில்லை என தெரிவித்தது.

விசாரணை
இந்த புகார் தொடர்பாக கின்னஸ் அமைப்பு நிபுணர்களை வைத்து விசாரணை நடத்தியது.

அம்பலம்
இந்த விசாரணையில் புகாட்டி வேரோன் காரை கஸ்டமைஸ் செய்து அந்த வேகத்தை எட்ட வைத்திருப்பது தெரியவந்தது.

வேகத்தடுப்பு கருவி
தனிநபர்களுக்கு விற்பனை செய்யப்படும் புகாட்டி வேரோன் கார்களில் மணிக்கு 258 மைல் வேகத்தில் செல்லும் வகையில் எலக்ட்ரானிக் வேகத்தடுப்பு கருவி பொருத்தப்பட்டிருக்கிறது.

தில்லுமுல்லு
இந்த எலக்ட்ரானிக் வேகத்தடுப்பு கருவியை செயலிழக்க செய்து அந்த சாதனையை புகாட்டி வேரோன் கார் பதிவு செய்தது தற்போது அம்பலமாகியிருக்கிறது. கின்னஸ் விதிமுறைகளின்படி, காரில் எந்த மாறுதல்களும் செய்யப்பட்டிருக்கூடாது.

மீண்டும் ஷெல்பிக்கு பட்டம்
புகாட்டி வேரோன் மற்றும் ஹென்னிஸி வேனோம் ஜிடி கார்களின் சாதனை ஏற்கப்படாததால், அதற்கு முந்தைய அதிவேக கார் சாதனையை செய்த ஷெல்பி சூப்பர்கார்ஸின் அல்டிமேட் ஏரோ மீண்டும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் உலகின் அதிவேக கார் டைட்டிலை மீண்டும் பெற்றுள்ளது.

ஷெல்பியின் சாதனை
ஷெல்பி அல்டிமேட் ஏரோ கார் மணிக்கு 412.153 கிமீ வேகத்தை தொட்டு சாதனையை பதிவு செய்தது.

ஷெல்பி அல்டிமேட் ஏரோ

வேனோம் ஜிடி வேகப் பதிவு
காற்றுக்கு எதிர்திசை மற்றும் நேர்திசை என இருபக்கங்களிலும் சேர்த்து சராசரியாக மணிக்கு 427.602 வேகத்தை தொட்டதாக ஹென்னிஸி தெரிவித்துள்ளது. மேலும், தனி நபர் மார்க்கெட்டுக்கான உற்பத்தி நிலை கார் இந்த வேகத்தை எட்டிய முதல் காராகவும் தனது காரை குறிப்பிட்டுள்ளது.

வேனோம் ஜிடிக்கு சிக்கல்
இது ஒருபுறம் இருக்க குறைந்தது 50 கார்களை உற்பத்தி செய்தால்தான் உற்பத்தி நிலை காராக கின்னஸ் பதிவில் ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால், இந்த எண்ணிக்கையை ஹென்னிஸி வேனோம் எட்டவில்லை.



Click it and Unblock the Notifications








