கோவாவில் தரிசனம் தரப்போகும் 'மேட் இன் இந்தியா' ஹார்லி பைக்!
அடுத்த மாதம் கோவாவில் நடைபெற இருக்கும் இந்தியா பைக் வீக் திருவிழாவில் குறைவான விலை கொண்ட ஹார்லி டேவிட்சனின் புதிய ஸ்ட்ரீட் 750 பைக் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
ஹார்லி டேவிட்சனின் குறைவான விலை கொண்ட ஸ்ட்ரீட் 750 என்ற புதிய பைக் மாடல் மிலன் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

முதலில் கோவாவில் நடைபெற இருக்கும் இந்தியா பைக் வீக் திருவிழாவில் இந்த புதிய பைக் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. அதனைத்தொடர்ந்து, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்திய சப்ளையர்களிடமிருந்து பாகங்களை பெற்று தயாரிக்கப்பட உள்ள இந்த புதிய ஹார்லி டேவிட்சன் பைக் அடுத்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு வருகிறது. பெரும் ஆவலைத் தூண்டியிருக்கும் இந்த புதிய பைக் மாடல் ரூ.4.5 லட்சம் விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








