3 பைக்குகளின் விலையை ரூ.5.5 லட்சம் குறைத்த ஹார்லி டேவிட்சன்!

இந்தியாவிலேயே மேலும் 3 மோட்டார்சைக்கிள்களை ஒருங்கிணைத்து விற்பனை செய்ய உள்ளது ஹார்லி டேவிட்சன். இதனால், அந்த மூன்று மாடல்களின் விலையையும் ரூ.5.5 லட்சம் வரை குறைத்திருக்கிறது. இந்திய மார்க்கெட்டில் 12 மோட்டார்சைக்கிள் மாடல்களை ஹார்லி டேவிட்சன் விற்பனை செய்து வருகிறது. இதில், தற்போது 9 மாடல்கள் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் புதிதாக ஒருங்கிணைக்கப்படும் 3 மாடல்களின் விலை தோராயமாக 20 சதவீதம் அளவுக்கு குறைத்திருக்கிறது ஹார்லி டேவிட்சன். விலை குறைப்பை முன்பே அறிவித்தாலும், மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி பைக்குகளுக்கான வரி கணிசமாக அதிகரிக்கப்பட்டதும் இந்த உடனடி அறிவிப்புக்கு காரணமாகிவிட்டது. விலை குறைக்கப்பட்ட மாடல்கள் மற்றும் விலை விபரங்களுக்கு ஸ்லைடருக்கு வாருங்கள்.

ஹார்லி டேவிட்சன் - ஃபேட் பாய்

ஹார்லி டேவிட்சன் - ஃபேட் பாய்

முன்பு இறக்குமதி செய்யப்பட்டபோது விலை - ரூ.19.45 லட்சம்

இப்போதைய அசெம்பிள் மாடல் விலை ரூ.14.9 லட்சம்

 ஃபேட் பாய் ஸ்பெஷல்

ஃபேட் பாய் ஸ்பெஷல்

முந்தைய விலை ரூ.19.70 லட்சம்

தற்போதைய விலை ரூ.15.6 லட்சம்

 ஹெரிடேஜ் சாப்டெயில் கிளாசிக்

ஹெரிடேஜ் சாப்டெயில் கிளாசிக்

முந்தைய விலை ரூ.20.45 லட்சம்

தற்போதைய விலை ரூ.16.25 லட்சம்

ஹார்லியின் எதிர்கால திட்டம்

ஹார்லியின் எதிர்கால திட்டம்

தேசிய அளவில் நடைபெறும் பல்வேறு பைக் நிகழ்ச்சிகளில் ஹார்லி தயாரிப்புகளுக்கு சிறந்த வரவேற்பு இருக்கிறது. இதனை மனதில்கொண்டு இந்தியாவில் எங்களது வர்த்த திட்டங்களை விரிவுப்படுத்த உள்ளோம். மேலும், சரியான விலையில் கொடுப்பதற்காக பல மாடல்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய உள்ளோம். இதற்கான முதலீடுகளை தயக்கமின்றி செய்ய இருக்கிறோம்,"என்கிறார் ஹார்லி நிர்வாக இயக்குனர் அனூப் பிரகாஷ்.

சாப்ட்டெயில் குடும்பம்

சாப்ட்டெயில் குடும்பம்

விலை குறைக்கப்பட்ட சாஃப்ட்டெயில் வரிசையில் அடங்கிய ஃபேட் பாய் ஸ்பபெஷல், ஃபேட் பாய் ஹெரிடேஜ் சாஃப்ட்டெயில் கிளாசிக் பைக்குகளுடன் அனூப் பிரகாஷ்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 5, 2013, 15:04 [IST]
English summary
Harley-Davidson, the luxury cruiser motorcycle maker will start assembly of three additional models in India. These models are the Fat Boy, Fat Boy Special and Heritage Softtail Classic. Harley's latest decision comes soon after last week's Union Budget announcements, which increased the import duty from the earlier 60 percent to 75 percent for bikes with engines larger than 800cc.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+