பிப்ரவரியில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் விற்பனை அமோகம்

அம்பாசடர் மற்றும் வின்னர் மினி டிரக் விற்பனையை உள்ளடக்கி மொத்தம் 826 வாகனங்களை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இது 166 சதவீதம் கூடுதல்.
மேலும், கடந்த ஆண்டு டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் 20.36 கோடியை நிகர லாபமாக ஈட்டி இருப்பதாக ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. சிறந்த சேவை மற்றும் வர்த்தக விரிவாக்க நடவடிக்கைகளின் பயனாக விற்பனை அதிகரித்து வருவதாக ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் சிஇஓ உத்தம் போஸ் தெரிவித்துள்ளார்.
காரணம் என்ன?
இதனிடையே, கடும் போட்டி காரணமாக மார்க்கெட்டை இழந்த அம்பாசடர் விற்பனை திடீரென அதிகரித்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதன் பின்புலத்தை ஆராய்ந்தபோது கோல்கட்டா நகரில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடும் டாக்சி கார்களுக்கு மாற்றாக புதிய அம்பாசடர் கார்களை வாங்குவதற்கு டாக்சி ஓட்டுனர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோல்கட்டா உள்ளிட் மாநகரங்களில் பிஎ மாசுக்கட்டுப்பாடு கொண்ட வாகனங்களை மட்டுமே விற்க முடியும் என்ற நிலையில், பிஎஸ்3 மாசுக்கட்டுப்பாட்டு அம்சம் கொண்ட அம்பாசடர் கார்களை வாங்கிக் கொள்வதற்கு அரசு தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது. அம்பாசடர் விற்பனை திடீர் உயர்வுக்கு இதுவே காரணமாக தெரியவந்துள்ளது. கோல்கட்டா நகரில் 3,000 பழைய டாக்சி கார்களுக்கு மாற்றாக தற்போது அம்பாசடர் வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








