புது சட்டை போட்டு புறப்பட்டு வருகிறான் 'சின்ன அம்பி'!
இந்திய சாலைகளின் ராஜா என்று வர்ணிக்கப்படும் அம்பாசடர், விரைவில் காம்பெக்ட் அவதாரம் எடுக்கிறது. புதிய காம்பெக்ட் அம்பாசடர் காரை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தலைவர் உத்தம் போஸ் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய கார் மூலம் அம்பாசடர் பிராண்டுக்கு புத்துயிர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வைப் போட்டியாளர்
பின்பகுதியில் நீளம் குறைக்கப்பட்டாலும், இது ஹேட்ச்பேக் காராக இல்லாமல், மஹிந்திரா வெரிட்டோ வைப் போன்றே நாட்ச்பேக் காராக இருக்கும்.

பெயர்
இந்த கார் அம்பாசடர் பிராண்டிலேயே வந்தாலும், அம்பாசடருடன் கூடுதல் இணைப்பு பெயருடன் வரும்.

மாடர்ன் டிரெஸ்
மார்க்கெட்டில் தற்போது இருக்கும் நவீன டிசைன் கொண்ட கார்களுடன் போட்டி போடும் தோற்றத்துடனும், ஏராளமான புதிய வசதிகளுடனும் இருக்கும் என உத்தம் போஸ் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இளைய சமுதாய வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என அவர் கூறியுள்ளார்.

புதிய மார்க்கெட்
விஐபி கார் என்று பெயரெடுத்த அம்பாசடரை மீண்டும் மார்க்கெட்டில் நிலைநிறுத்தும் விதமாக புதிய வாடிக்கையாளர் பின்புலத்தை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் புதிய அம்பாசடர் காருக்கு நிலையான மார்க்கெட் பெறவும் திட்டமிட்டுள்ளோம், என ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் மற்றொரு உயரதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.

21ம் நூற்றாண்டு அம்பி
மொத்தத்தில் புதிய அம்பாசடர் கார் 21ம் நூற்றாண்டின் சிறந்த கார்களில் ஒன்றாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சரி, பழைய அம்பாசடரை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் எவ்வாறு மாற்றி வழங்கப்போகிறது என்பதை காண்பதற்கு ஆவல் பிறந்துள்ளது.


Click it and Unblock the Notifications








