சிவிக்கை தொடர்ந்து அக்கார்டு கார் விற்பனையை நிறுத்திய ஹோண்டா!
விற்பனை இல்லாததால் ஹோண்டா அக்கார்டு காரின் விற்பனையை நிறுத்துவதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட அக்கார்டு பிரிமியம் செடான் கார் இதுவரை 11,492 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த 8 மாதங்களில் 272 அக்கார்டு கார்களை மட்டுமே ஹோண்டா விற்பனை செய்துள்ளது. இதையடுத்து, அக்கார்டு கார் விற்பனையை நிறுத்துவதாக ஹோண்டா தெரிவித்துள்ளது. இதனை ஹோண்டா கார் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ஞானேஸ்வர் சென் உறுதி செய்துள்ளார்.
மேலும், புதிய தலைமுறை அக்கார்டு கார் அறிமுகம் செய்வதை உறுதிப்படுத்திய அவர், அதற்கான காலக்கெடு குறித்த தகவல் எதையும் உறுதிப்படுத்தவில்லை. விற்பனையில் பின்தங்கியதால் சிவிக் கார் விற்பனையையும் ஹோண்டா நிறுத்தியது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








