ஹோண்டா அமேஸ்-க்கு பெரும் வரவேற்பு: இதுவரை 22,000 பேர் முன்பதிவு
கடந்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஹோண்டா அமேஸ் காருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை மூன்று வாரங்களில் மட்டும் 22,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு மாருதி டிசையருக்கு கிடைத்த முதல்கட்ட முன்பதிவுக்கு இணையான அளவு அமேஸ் காருக்ககு முன்பதிவு கிடைத்துள்ளது.
அமேஸ் காரை பற்றிய விசாரணைகளும், டெஸ்ட் டிரைவ் செய்ய வரும் வாடிக்கையாளர்களின் அளவும் சமாளிக்க முடியாத அளவுக்கு இருப்பதாக ஹோண்டா டீலர்களில் இருக்கும் பணியாளர்கள் தெரிவித்தனர். குறிப்பாக, வார இறுதி நாட்களில் பணியாளர்களின் பாடு திண்டாட்டமாக இருக்கிறதாம். இதற்கு முக்கிய காரணம் அமேஸின் மைலேஜ், இடவசதி, விலை ஆகியவை முக்கிய காரணமாக கூறலாம். ஹோண்டா அமேஸ் உண்மையான மைலேஜ் மற்றும் இதர விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசையருக்கு நெருக்கடி
அமேஸ் காரின் வருகை டிசையருக்கு பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது. அமேஸ் காருக்கு கிடைத்துள்ள இந்த முன்பதிவு எண்ணிக்கை நிச்சயமாக டிசையரின் மார்க்கெட்டில் சிறிது பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எனவேதான், டிசையருக்கு மைலேஜ் டிரைவ் ராலி, சிறப்பு சலுகைகள், ஸ்பெஷல் எடிசன் என மாருதி மார்க்கெட்டிங் யுக்திகளை பயன்படுத்த துவங்கியிருக்கிறது. அமேஸ் வருகையால் டிசையருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடருமா அல்லது குறையுமா என்பது அடுத்து வரும் மாதங்களின் விற்பனை அறிக்கையில் தெரிந்துவிடும்.

உண்மையான மைலேஜ்
பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 18 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 25.8 கிமீ மைலேஜையும் தரும் என ஹோண்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையான நிலவரங்களின்படி, அமேஸ் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு சராசரியாக 14 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு ஓட்டுதல் நிலைகளை பொறுத்து சராசரியாக 22 கிமீ மைலேஜ் தருவதாக தெரியவந்துள்ளது.

ஹோண்டா உற்சாகம்
பெட்ரோல் மாடல்களால் விற்பனை இல்லாமல் சோர்ந்துபோய் கிடந்த ஹோண்டாவுக்கும், அதன் டீலர்களுக்கும் அமேஸ் வருகை மிகப்பெரிய தெம்பை கொடுத்துள்ளது. மேலும், டெலிவிரியையும் கடந்த வாரம் முதல் துவங்கி படு சுறுசுறுப்பாக செய்து வருகின்றனர்.

காத்திருப்பு காலம்
ஹோண்டா டீலரிடம் நேரில் விசாரித்தபோது, பெட்ரோல் காரை ஒரு மாதத்தில் டெலிவிரி தருவதாகவும், டீசல் காரை இரண்டரை மாதங்களுக்குள் டெலிவிரி தருவதாகவும் தெரிவித்தார். ஆனால், தொடர்ந்து அதிகரித்து வரும் முன்பதிவு எண்ணிக்கையை சரியாக கையாண்டு டெலிவிரியை சரியான சமயத்தில் கொடுத்தால் மட்டுமே அமேஸ் காருக்கான வரவேற்பை தொடர்ந்து ஹோண்டா தக்கவைத்துக் கொள்ள முடியும்.

எஞ்சின் சப்தம்
அமேஸ் காருக்கு வரும் முன்பதிவில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக டீசல் மாடலுக்குத்தான் வருகிறது. ஆனால்,டீசல் மாடல் காரின் எஞ்சின் சப்தம் அதிகமிருக்கிறது. பொதுவாக டீசல் கார்களின் எஞ்சின் சப்தம் அதிகமிருப்பது அறிந்தது என்றாலும், அமேஸ் டீசல் எஞ்சின் சற்று சப்தம் சற்று அதிகமாக இருக்கிறது.

இடவசதி
ஹோண்டா அமேஸ் காருக்கு மிகப் பெரிய ப்ளஸ் இடவசதிதான். காரில் ஏறி உட்கார்ந்தவர்கள் அனைவரையும் இடவசதி சட்டென மனதில் பதிந்துவிடுகிறது. 6 அடிக்கும் அதிகமானவர்கள் கூட தாராளமாக அமர்ந்து கொள்வதற்கு ஏதுவாக ஹெட்ரூம், லெக்ரூம் சிறப்பாக இருக்கிறது.

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்
டீசல் மாடலின் அனைத்து வேரியண்ட்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இருக்கிறது. ஆனால், சிடி பிளேயர் கிடையாது என்பது வாடிக்கையாளர்களை முகம் சுளிக்க வைக்கிறது.

மயங்கிய வாடிக்கையாளர்
பல வண்ணங்களில் அமேஸ் கிடைத்தாலும், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கரீபியன் ரெட் கலரை அதிக அளவில் தேர்வு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








