அமேஸ் காருக்கு ஸ்பெஷல் ஆக்சஸெரீஸ் பேக்: ஹோண்டா அறிமுகம்
பண்டிகை காலத்தையொட்டி, கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் ஸ்பெஷல் எடிசன் மாடல்களை பல முன்னணி நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன. இந்த வழியிலிருந்து சிறிது மாறி, அமேஸ் காருக்கு ஸ்பெஷல் ஆக்சஸெரீஸ் பேக்கை ஹோண்டா அறிமுகம் செய்துள்ளது.
விற்பனையில் சூடு பறந்து வரும் அமேஸ் காருக்கான இந்த கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் நிச்சயம் கூடுதல் மதிப்பையும், வசதியையும் தரும். சிறப்பு ஆக்சஸெரீஸ்கள் பற்றிய விபரத்திற்கு ஸ்லைடருக்கு வாருங்கள்.

புதிய கிரில்
முன்புறம் இரட்டை பட்டைகள் கொண்ட குரோம் கிரில்லுக்கு பதிலாக கருப்பு பின்னணி கொண்ட புதிய கிரில் வழங்கப்படுகிறது. இது பிற அமேஸ் கார்களிலிருந்து வேறுபடுத்தும். இதுதவிர, பம்பரில் லிப் ஸ்பாய்லரும் கொடுக்கப்படுகிறது.

சைடு ஸ்கர்ட்
சைடு ஸ்கர்ட், ரியர் ஸ்கர்ட், டிரங்க் ஸ்பாய்லர் ஆகியவையும் இந்த ஆக்சஸெரீஸ் பேக்குடன் கிடைக்கிறது.

புதிய அலாய் வீல்
இந்த சிறப்பு ஆக்சஸெரீஸ் பேக்கில் முக்கியமாக புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன என்பதை குறிப்பிட்டு கூறலாம். இதுதவிர, ஸ்டிக்கர்களும் வழங்கப்படுகின்றன.

இன்டிரியர்
ஸ்போர்ட் அலுமினியம் பெடல்களும், கால்களுக்கான பகுதிக்கான ஃபுட் விளக்குகளும் தரப்படுகின்றன.

விலை
விலை குறித்த அறிவிப்பை ஹோண்டா இன்னும் வெளியிடவில்லை. விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு 5 மாதங்களில் இதுவரை 37,841 அமேஸ் கார்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








